கண்டி மாவட்டம் முழுவதும் கடந்த மார்ச் 4 ஆம் திகதி இரவு முதல் பதிவான வன்முறைகள் கரணமாக இரு உயிர்கள் காவுகொள்ளப்பட்டு மேலும் 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்ததாவது, மார்ச் 5 ஆம் திகதி வன்முறையாளர்களால் கொளுத்தப்பட்ட கடை மற்றும் வீட்டுடன் கூடிய கட்டடத்துக்குள் இருந்து 26 வயதான இளைஞர் (அப்துல் பாசித்) ஒருவர் மீட்கப்பட்டிருந்தார்.
புகை அவரது சுவாசப் பைகளை நிரப்பியதால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளமை பிரேத பரிசோதனை ஊடாக உறுதியாகியுள்ளது.
எனினும் தீ வைப்பு ஒரு திட்டமிட்ட குற்றச் செயல் என்பதால் அந்த மரணம் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியோரைக் கைதுசெய்ய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழான குழுவொன்றினை விசாரணைக்கு அனுப்பியுள்ளார் என்றார்.