Top News

ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி பொது செயலாளர் இலங்கை வருகை



ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி பொது செயலாளர் ஜெஃப்ரி ஃபெல்ட்மன் நேற்று (08) இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இவர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் இவர் இலங்கையில் தங்கி இருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த காலப்பகுதியில் அவர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும், அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் என்பவற்றின் பிரதிநிதிகளையும், மதத்தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஜெஃப்ரி ஃபெல்ட்மன் கண்டிக்கு சென்று பார்வையிட உள்ளதுடன் அங்குள்ள மத தலைவர்களுடனும் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post