இலங்கை ஒரு துாய பௌத்த நாடு, பௌத்தர்கள் ஆளும் ஓரே நாடு, தேரவாத பௌத்தர்கள் செறிந்து வாழும் ஓரே நாடு, பௌத்தர்களின் புராதன நாடு, பௌத்தர்கள் சின்னங்கள் அதிகமுள்ள நாடு, பௌத்தர்களுக்கென இருக்கும் செழிப்பான நாடு என்று மார்தட்டிச் சொல்லும் இலங்கை தேசத்தின் சிங்களவர்கள் ஆதிகுடிகளின் பரம்பரைகள் ஆவர்.
வேடுவ இனமாக இருந்த சிங்கள ஆதிகுடியினரை துாய பௌத்தத்தால் மனம் குளிரச் செய்த கௌதம புத்தர் இந்த நாட்டில் எந்தவித வித அசம்பாவிதங்களும் நடக்காதவாறு பௌதத்ததையும் துறவி நிலையையும் சொல்லிக் கொடுத்தார், போர்ததுக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் வருவதற்கு முன்னர் இந்த தேசத்தில் சிங்கள பௌத்தர்களும், அரேபிய முஸ்லிம்களும் பிட்டும் தேங்காயும் போல வாழ்ந்து வந்தனர், அரேபிய முஸ்லிம்களே சிங்கள பௌத்தர்களுக்கு வியாபாத்தை சொல்லிக் கொடுத்தனர். அதனால் நாட்டை வளமுற செய்தனர். துறைமுகம் கட்டவும், கப்பல் கட்டவும், நாடுகடந்த வியாபாரத்தை செய்யவும் சொல்லிக்கொடுத்தனர. இதனால் முஸ்லிம்களை சிங்கள பௌத்தர்கள் தங்களின் சகோதரர்களாக பாரத்தனர், இந்த உறவு சிங்கள பௌத்த பெண்மணிகளை முஸ்லிம்கள் திருமணம் முடிக்கும் அளவு வரை நீண்டது. காலங்கள் கழிந்தன.
யூதர்கள் நாடுகளை பிடித்துக்கொண்டு வந்த காலகட்டம், இலங்கை ஒரு வளமுள்ள நாடு இதனால் இலங்கையையும் தம் வசமாக்க திட்டமிட்டு ஆயுத கலாசாரத்தையும் அடிமைக்குல கலாசாரத்தையும் இலங்கைக்குள் கொண்டு வந்தனர் யூதர்கள், ஏலவே முஸ்லிம்களுடன் கோபமாய் இருந்தவர்கள் முஸ்லிம்களை வன்முறைக்குள் தள்ளினர், சிங்களவர்களை துாண்டிவிட்டனர் ஆனாலும் பிரச்சினைகளின் போது சிங்கள மன்னர்களே முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர். கொழும்பிலும் காலியிலும் ஆங்கிலேயர் முஸ்லிம்களை தாக்கிய போது கண்டிய மன்னன் முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்தான் இதுதான் வரலாறு.
ஆனால் எந்த வழிமுறைமுயையை யுதர்கள் கையாண்டார்களோ அது இன்று வரை நீண்டு கொண்டு செல்கிறது, பிரச்சினை ஒன்றை இலகுவில் மதத்தின் மூலம் கொண்டு செல்லலாம், அது அனைவருக்கும் தெரிந்த விடயம், மத சாரந்த விடயங்களை குழப்புவதன் மூலம் ஒரு சமூகததை வன்முறைக்குள் தள்ளமுடியும் அப்படித்தான் இலங்கையில் நடைபெற்ற அனைத்து வன்முறைகளும் இடம்பெற்றுள்ளது, 90 வீதம் மதத்தினால் என்றால் 10 வீதம் மொழியால் இடம்பெறும்.
முஸ்லிம் சிங்கள இனவாத பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல, அது மஹிந்த அரசில் இடம்பெற்றது, சந்திரிக்கா அரசில் இடம்பெற்றது, சிறீமா ஆட்சியில் இடம்பெற்றது, பிரேமதாச ஆட்சியில் இடம்பெற்றது அதற்கு முன்னர் இருந்த ஆட்சியாளர்கள் ஆட்சியில் இடம்பெற்றது மைத்திரிபால அரசு ஒன்று விதிவிலக்கல்ல, இதனை மேற்கத்தைய சக்திகள் கையாளுகின்றன அது யார் யாராக இருக்கும் என்பதில்தான் பிரச்சினை வெளிநாட்டு சக்திகள் உதவிபுரியாத எந்தவொரு பிணக்குகள் தொடர்ந்ததாக வரலாறு இல்லை.
மஹிந்த ராஜபக்ஷ அரசில் தலைதுாக்கிய பொதுபலசேனா அமைப்பு அதிகப்படியான முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளை செய்தது, பள்ளிவாசல் உடைப்பு, ஹலால் சான்றிதழ் பறிப்பு, முஸ்லிம்களின் பூர்வீக காணிகளை சவீகர்த்தைமை என்று பட்டியல் நீளுகிறது. இதற்கு எதிர்ப்பாகவே நல்லாட்சி அரசாங்கத்திற்கு இந்த நாட்டு முஸ்லிம்கள் வாக்களித்தனர். ஆனால் எதிர்பார்த்தது போல நடைபெறவில்லை அதற்கு இப்போதயை நல்லாட்சி காரணமல்ல இதற்குள் ஆயிரம் அரசியல் மூழ்கி கிடக்கிறது இதிலிருந்து எப்படி பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.
நாட்டின் 25 மாவட்டங்களில் உள்ள அனைத்து ஊர்களிலும் பள்ளிவாசல் இருக்கிறது, புதிதாக கட்டப்படுகிறது, புணரமைக்கப்படுகிறது அப்படி இருக்கையில் இலங்கையின் இரண்டாவது சிறுபான்மையாகிய முஸ்லிம்களுக்கு இவ்வளவு உரிமைகள் இருக்கின்றது என்றால் சிங்கள பொத்தர்கள் பெரும்பான்மை இனத்திற்கு எவ்வளவு உரிமைகள் இருக்கும் இருக்க வேண்டும். அவர்களின் பூர்வீக பூமியில் அவர்கள் கட்டுமாணம் மேற்கொள்வதில் பிரச்சனைகள் ஏதும் இல்லலை, சிலை வைப்பதால் முஸ்லிம்கள் மதம் மாறிவிடப்போவதில்லை, எங்களுக்குள் அவர்கள் வசித்தால் அவர்களுக்கு நமது மார்க்கத்தை அதிகம் சொல்லிக்கொடுக்க முடியும்.
இன்று நாம் செய்யவேண்டிய பெரும்பணி எமது புனித இஸ்லாமியத்தை மற்றை சமூகத்திற்கு சொல்ல வேண்டும், அதனை விளங்கப்படுத்த வேண்டும் அதன் மூலம் எமது முஸ்லிம்களை அவர்கள் மதிப்பர், புனித இஸ்லாமியத்தை கண்ணியப்படுத்துவர் அதை விடுத்தது அவர்களுக்கு எதிராக செய்ற்படுவது கூடாது.
இஸ்லாம் ஒரு பரிபூரண மார்க்கம், இதனை இந்தப்பாரினில் ஓங்கச் செய்திடல் வேண்டும், சிங்கள தேசத்தில் அவர்கள் விகாரைகளை அமைக்கட்டும் இறைவனிடத்தில் பாரம் கொடுங்கள், இறை மறையை ஓதுங்கள் அதன்படி நடங்கள் அல்லாஹ் இனைத்திற்கும் போதுமானவன்.
பஹத் ஏ.மஜீத்