ஜனாதிபதி முன்னிலையில் ஐ.ம.சு.கூ. உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம்!

NEWS
0 minute read



( ஐ. ஏ. காதிர் கான் )

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது கொழும்பு மா நகர சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 புதிய மா நகர சபை உறுப்பினர்களும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். 

   ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றைய தினம் (27) முற்பகல் இந்நிகழ்வு இடம்பெற்றது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
6/grid1/Political
To Top