அக்குரணை எந்நேரத்திலும், தாக்கப்படலாம் என்ற நிலை

NEWS


அமைச்சர் றிசாத்தின் ஊடகப் பிரிவு-

அமைச்சர்  றிசாத் தலைமையிலான  குழாம் அக்குரணைக்குச் சென்று அங்குள்ள பள்ளிவாசலில் மக்களை சந்தித்து, நிலைமைகளை கேட்டறிந்தனர். எந்த நேரத்திலும் தமது கிராமம் தாக்கப்படக் கூடும் என்ற நிலை இருப்பதாகவும் தெரிவித்த அவர்கள், படையினரின் செயற்பாடுகளில் தமக்கு நம்பிக்கை இல்லை எனவும் கூறினர்.

அநேகமான கண்டி மாவட்டத்தில் உள்ள எல்லா முஸ்லிம் கிராமங்களிலும் மக்கள் அச்சத்துடனையே வாழ்கின்றனர். இனவாதிகள் எந்த வழியால், எப்படி வருவார்கள் என்று தங்களுக்கு தெரியாத நிலையில், இரவு நேரங்களில் விழித்துக்கொண்டே தாம் இருப்பதாகக் கவலை வெளியிட்டனர்.

இனவாதிகள் எரித்துவிட்டுச் சென்ற கடைகளை அணைக்கும் பணியில், படையினர் ஈடுபட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது. அமைச்சர் குழாம் தற்போது பாதிக்கப்பட்ட ஏனைய இடங்களையும் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.     
6/grid1/Political
To Top