கடந்த சில நாட்களுக்கு முன் அம்பாறைக்கு வேலைப்பளு காரணமாக எனது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தேன். அஷர் தொழுகைக்காக மோட்டார் சைக்கிளை சாய்ந்தமருது பள்ளிவாயலுக்குள் நிறுத்தினேன் ஓரமாக. ஒரு நிழலில் இரு சகோதரிகள் ஒரு சாப்பாட்டு பார்சலை சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள் யாசகத்துக்கு வந்துள்ளவர்கள் என்பதை உணர்ந்தேன்!
ஒரு சகோதரி ஒரு தள்ளு நாட்காலியில் இருந்து கொண்டு சாப்பிட முடியாமல் அவதிப்படுவதையும் பார்த்துவிட்டு பள்ளிவாயல் உள்ளே சென்று தொழுதேன் தொழுகையின் போது இந்த இரு சகோதரியின் நிலமை கண்ணுக்குள் வந்து சென்றது. தொழுகையை முடித்து கொண்டு அந்த இரு சகோதரிகளையும் சந்தித்ததேன் அவர்களை பற்றி விசாரித்தேன் எனக்கு ஆச்சரியமும் ,அதிர்ச்சியும்
கவலையும் தந்தது இந்த விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் இந்த சகோதரிக்கு ஓர் நிரந்தர தீர்வை நாம் எல்லோருமாக சேர்ந்து பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற தூய என்னத்துடன் இதை பதிவிடுகிறேன்!
கீழ் உள்ள புகைப்படத்தில் இருக்கும் சகோதரியின் பெயர் : பாத்திமா ரஜீமா
இடம்: 198, மைய்யவாடி வீதி அட்டாளைச்சேனை 06
வயது : 29
இந்த சகோதரி பிறந்தது தொடக்கம் இன்று வரை ஊனமுற்று,அங்கவீனமாக வாழ்ந்து கொண்டு வருகிறாள்… இந்த சகோதரியின் தகப்பனார் சுனாமி காலப்பகுதியில் மரணம் அடைந்துள்ளார் தாய் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் சகோதர,சகோதரிகளாக ஏழு பேர் வாழ்ந்து வருகின்றார்கள்.
இவர்கள் எந்த வருமானமும் அற்ற நிலையில் வாழ்வதால் சுகயீனம் அடைந்த நிலையில் வாழும் பாத்திமா ரஜீமா வை நாற்காலியில் தள்ளிக்கொண்டு அவரின் சகோதரி அஸ்மியா (வயது 31) யாசகம் எடுத்து வாழ்ந்து வருகின்றார்கள்.
இதில் இன்னும் கவலையான விடயம் என்னவென்றால் யாசகம் பெறுவற்காக இந்த சகோதரியை அட்டாளைச்சேனையில் இருந்து கல்முனை பகுதிக்கு ஏற்றி வந்து செல்ல முச்சக்கரவண்டி கூலிக்காக எடுத்து செல்கின்றார்கள் அதற்கான போக்குவரத்து கூலி 1200/= நாளாந்தம் கொடுக்கின்றார்கள்
இவர்கள் 2000-2500/= வசூல் செய்கின்றார்கள் அதில் முச்சக்கர வண்டிக்கான கூலி 1200 கெடுத்துவிட்டால் மிகுதியாக சிறு தொகை 1000-1500 வரையே அவர்கள் வீட்டுக்கு கொண்டு சென்று செலவு செய்வதாக தெரிவிக்கின்றார்கள்.
இவர்களின் நிலை தொடர்பாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிவில் அமைப்புக்ள்,அரசியல்வாதிகள்,தொ ண்டு நிறுவனங்கள் எந்த கவனமும் உதவியும் செய்யாத நிலையில்தான் நான் எனது சகோதரி ரஜீமாவை (வயது29) நாட்கலியில் வைத்து தள்ளிக்கொண்டு வசூல் செய்வதாக ரஜீமாவின் சகோதரி அஸ்மியா (வயது 31) சாய்ந்தமருது பள்ளிவாயல் முன்றலில் மனம் குமுற கண்ணீருடன் தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தாள்…
இதில் மேலும் கவலையான விடயம் என்னவென்றால் இந்த புகைப்படத்தில் உள்ள சகோதரி ரஜீமா அங்கவீனப்பட்டு இருப்பதால் அந்த சகோதரியின் உடல் நிலை மோசமாக இருந்தது நாட்களியில் நேராக கூட இருக்க முடியவில்லை வளைந்து கொண்டு இருப்பற்கு அவதிப்படுவதை அவதானிக்க முடிந்தது நான் பேசிய அனைந்து விடயத்தையும் சகோதரி ரஜீமா செவிமடுத்தால் ஆனால் பதில் பேச முடியாது தனது சகோதரியுடன் மாத்திரமே பேசுகின்றார்கள் நான் ரஜீமாவின் சகோதரி அஸ்மியாவிடம் இந்த விடயங்களை கேட்டு எழுதிக்கொண்டதன் பின் சகோதரி ரஜீமாவின் கண்களில் இருந்து வந்த கண்ணீர் எனது கண்களங்கையும் கலங்க வைத்து விட்டது…
ஆகையால் இவர்களின் இந்த நிலையை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எமது சமூகத்தில் அதித தனவந்தர்கள் உள்ளார்கள் சிவில் அமைப்புக்கள் உள்ளது அது போன்று அம்பாறை மாவட்டத்தில் பல அரசியல்வாதிகள் உள்ளார்கள் அவர்களின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு செல்ல வேண்டும் இந்த குடும்பம் தொடர்பில் ஒரு நிரந்த தீர்வை நாம் பெற்றுக்கொடுக்க வேண்டும் இந்த பதிவை பார்க்கும் ஒவ்வொருவரும் இந்த குடும்ப அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பது எம் அனைவரினதும் கடமையாகும்!
அந்த வகையில் அந்த குடும்பத்துக்கும் பாத்திமா ரஜீமாவுக்கும் நாம் என்ன உதவியை செய்ய வேண்டும் ரஜீமா,ரஜீமாவின் சகோதரி அஸ்மியா எதிர்பார்ப்பது என்ன?
புகைப்படத்தில் இருக்கும் ரஜீமாவை வீதிக்கு அழைத்து வருவதை நிறுத்துவதானால் நாங்கள் என்ன செய்ய வேண்டுமென ரஜீமாவின் சகோதரி அஸ்மியாவிடம் வினவியபோது?
எங்களுக்கும் யாசகம் கேட்டு கடைகளுக்கு செல்லவும் வீடுகளுக்கு செல்லவும் மன சங்கடங்களாக உள்ளது எங்களது குடும்ப வருமை நிலைக்காகவே ரஜீமாவை தள்ளிக்கொண்டு செல்கிறோம்!
நீங்கள் யாராவது ஆகக் குறைந்தது மாதம் 20000/= பணம் எங்களுக்கு தந்து உதவினால் ரஜீமாவின் செலவினங்களை நாங்கள் பார்த்து கொள்வோம் நாங்கள் கூலி தொழில் செய்தாவது எங்களது குடும்ப செலவை பார்த்துகொள்வோம்யென ரஜீமாவின் சகோதரி தெரிவித்தார்.
இந்த குடும்பத்தில் அவலநிலை கருதி ஒரு நான்கு தனவந்தர்கள் இனைந்து மாதம் 5000/= ரூபாய் பணத்தை கொடுத்து மாதம் 20000= வருமானத்தை கொடுத்து இந்த ரஜீமாவையும்,அஸ்மியாவையும் பாதுகாக்க முடியும் அல்லவா?
அல்லது ஒரு தனவந்தர் இந்த குடும்பந்தை பாதுகாக்க முடியும் அல்லவா?
அம்பாறை மாவட்ட ஒரு அரசியல்வாதியாவது இவர்களின் நிலை தொடர்பில் கவனம் செலுத்துவார்களா?
இந்த மகத்தான பனிக்கு உதவ விரும்புபவர்கள்
தொடர்புகொள்ளவும்
மாணவன்
முஹம்மட் நிப்றான்
(ரஜீமாவின் சகோதரர்)
0752589496
அல்லாஹ்வின் அடியார்களிலிருந்து ஓர் அடியார் அவனிடம் கொண்டு வரப்படுவார். அவருக்கு அல்லாஹ் செல்வத்தை அல்லாஹ் வழங்கியிருந்தான். அதனால் அவரிடம், “உலகத்தில் நீ என்ன அமல் செய்தாய்?” என்று அல்லாஹ் கேட்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி விட்டு, “அல்லாஹ்விடத்தில் அவர்கள் எந்தச் செய்தியையும் மறைக்க மாட்டார்கள்” என்ற (4:42) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
Abdul Majeed Mohamed Farsath
காத்தான்குடி