Top News

கிரிக்கெட் பாடசாலையாக விளையாட்டுத்துறை அமைச்சினால் தெரிவு; நிகழ்வும் இடம்பெற்றது

அகமட் எஸ். முகைடீன்

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸின் முயற்சியினால் அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி கிரிக்கெட் பாடசாலையாக விளையாட்டுத்துறை அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டு அதற்கான கடின பந்து விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் ஏ.எல். கமருடீன் தலைமையில் நேற்று (16) வெள்ளிக்கிழமை கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஏல்.எம். நசீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எஸ்.எம். உவைஸ், தமீம் ஆப்தீன், பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, கல்லூரியின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். 

விளையாட்டுத்துறை அமைச்சினால் 200 பாடசாலைகள் கிரிக்கெட் பாடசாலைகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியும் பிரதி அமைச்சர் ஹரீஸினால் உள்வாங்கப்பட்டு பாடசாலை மாணவர்கள் கடின பந்து கிறிக்கெட் பயிற்சியினை மேற்கொள்வதற்கு ஏதுவாக சிரேஸ்ட மற்றும் கனிஷ்ட பிரிவு விளையாட்டு கழகங்களுக்கான கடின பந்து விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. 



Previous Post Next Post