போலி பேஸ்புக் கணக்குகளை நீக்குவதற்கு பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கனணி அவசர பிரிவின் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் இந்த வருடத்தின் முதல் 2 மாதங்களிலும் 529 பேஸ்புக் கணக்குகளை முடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. போலி கணக்குகளை ஆரம்பித்தல், பேஸ்புக் கணக்குகள் மூலம் நிதி மோசடியில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றச் செயல்களை அடிப்படையாகக் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரொசான் சந்திரகுப்தா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இவ்வாறான முறைப்பாடுகளின் அடிப்படையில் கடந்த வருடத்தில் மாத்திரம் 3,600 பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.