கிண்ணியா நகர சபையினால் மாஞ்சோலை பிரதேசத்தில் டெங்கு சிரமதானம்

NEWS




ஹஸ்பர் ஏ ஹலீம்


அண்மையில்  பெய்த மழையின் காரணமாக கிண்ணியா நகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு பரவும் அபாயத்தைத் தடுக்கும் நோக்கில் கிண்ணியா நகரசபையின் செயலாளர்  என். எம். நௌபீஸ் அவர்களின் தலைமையில்  வெள்ளிக் கிழமை (02) மாஞ்சோலை  பிரதேசத்தில் டெங்கு சிரமதானம் நடைபெற்றது. 

கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் இவ்வாறான டெங்கு ஒழிப்பின் நடவடிக்கைகளின்போது எமது ஊழியர்களுடனான ஒத்துழைப்புக்களுடன் துரிதமாக தொடர்ந்தும் நடைபெறும் என இதன்போது பொது மக்களுடனான சந்திப்பின்போது கிண்ணியா நகர சபையின் செயலாளர் என்.எம்.நௌபீஸ் தெரிவித்தார். 

அத்துடன் தொடர்ச்சியாக ஏனைய பிரதேசங்களிலும் சிரமதானம் மேற்கொள்ள தீர்மாணிக்கப்பட்டுள்ளது.  இதில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், நகரசபை மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடன், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

6/grid1/Political
To Top