கண்டி தெல்தெனிய சம்பவத்தில் சிங்கள முஸ்லிம்களிடம் பிழையில்லை. அங்கு இனவாத மதவாத சிந்தனைகள் இல்லாத மனிதர்களை அவ்வாறான நிலைமைக்கு இழுத்துச் சென்றது.
தெல்தெனியா பொலிஸார் அனைத்து சம்பவங்களுக்கும் பொலிஸாரே பொறுப்பேற்கவேண்டும் என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ண தேரர் தெரிவித்தார்,
தெல்தெனியவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மங்களராம் விகாராதிபதி அம்பிட்டிய கமணரட்ன தேரர் நேற்று வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரி வித்துள்ளதாவது,
தான் மேற்குறித்த தினத்திற்கு முந்திய தினம் அதாவது 3 ஆம் திகதி முஸ்லிம்கள் அடித்ததனால் மரணமடைந்த எனது உறவினரான துனுவில் சேர கொட்டிய கிராமத்தில் வாழும். குமரசிறி என்ற இளைஞரின் மரண வீட்டிற்கு சமுகமளித்திருத்தேன்.
அதுவரை மரணம் தொடர்பாக கிராமத்தில் பல தரப்பட்ட கதைகள் காணப்பட்டன. அதற்கு காரணம் மரணமடைந்த இளைஞர் இறக்கும்வரை அடித்து 1 நாள் ஆகியும் சந்தேக நபர்கள் கைது செய்யப்படவில்லை .
இந்த நிலைமை இவ்வாறு இருக்கும் போது அந்த இளைஞர் இறந்து அவரது இறுதிக்கிரிகைகளுக்கு ஒரு நாள் இருக்கும் போது அடித்த நபர்கள் தொடர்பாக இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவிக்க முற்படுவதாக சந்தேகத்தின் பேரில் தெல்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் பல இளைஞர்களை தெல்தெனிய பொலிஸார் கைது செய்தனர்.
இந்தக் கைது சம்பவத்தினால் அந்தப் பிரதேச மக்கள் மிகவும் மனவேதனையடைந்தனர். அவர்கள் தமது பிரதேசத்திலுள்ள தங்களுக்கு உரித்தான பௌத்த விகாரைகளுக்குச்சென்று எந்த பிழையும் செய்யாத தங்களுடைய பிள்ளைகளை பொலிஸார் கைது செய்துள்ளதாக தேரர்களிடம் அழுது முறையிட்டனர்.
அடுத்த நான் மரணமடைந்த இளைஞரின் இறுதிக் கிரியைகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொண்ட நிலையில் அன்று காலை 8.30 மணிக்கும் 9 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பிரதேசத்தின் மகா சங்கத்தின் தேரர் மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், கைது செய்யப்பட்ட தங்களது உறவினர்களை விடுவிக்கும்படியான நோக்கத்திற்காக பொலிஸ் நிலையத்திற்கு முன் ஒன்று திரண்டனர். .
அந்தப் பொலிஸ் நிலையத்தில் அப்போது கடமையில் இருந்த சிரேஷ்டஉதவி பொலின் அத்தியட்சர், பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர், பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு இருந்த போது அந்த இடத்திற்கு நானும் ஏனையவர்களும் சென்று இம் மரணம் ஏற்பட்டது தொடர் பாகவும், எவ்வாறு ஏற்பட்டது எனவும் இதனால் மக்கள் அடைந்துள்ள வேதனை தொடர்பாகவும். இந்தப் பிள்ளைகளையும் இப்போது கைது செய்தால் மக்கள் மேலும் கோபமடைவதை தடுக்க முடியாது என பணி வாக கேட்டுக் கொண்ட போதும் அவர்கள் செவிமடுக்கவில்லை இதற்குரிய சரியான தீர்மானம் எடுக்காமையே அப்பாவி மக்களிடையே முரண்பாட்டை ஏற்படுத்தியது.
இந்த சந்தர்ப்பத்தில் ஒரு சிலர் இதனை மேலும் முரண்பாட்டுக்குள்ளாக்கி னர். ஆனாலும் நாங்கள் அதனை தடுப்பதற்கு முயற்சித்தோம். இனவாதத்தையோ மதவா தத்தையோ உருவாக்குவதற்கு நாம் அங்கு செல்லவில்லை. இங்கு எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது எந்த ஒரு அமைப்புகளோ தலையிடாது இருந்ததை நான் அவதானித்திருந்தேன்.
இருந்தபோதும் பொலிசாரினுடைய இந்த செயற்பாட்டினால் மக்களிடையே ஏற்பட்ட கவலையே இந்தப் பிரச்சினைக்கு காரணம். நான் இந்த விடயத்தை விளங்கப்படுத்துவ தற்கு முயற்சி செய்வதற்கான காரணம் தான் மட்டக்களப்பு பிரதேசத்தில் பெரும்பான்மைபான தமிழ், முஸ்லிம் மக்களுடன் கடந்த 20 வருடங்களாக துன்பங்களிலும் இன்பங் களிலும் பங்கேற்று வாழ்ந்துவரும் ஒருவன்,
இருந்தபோதும் கடந்த நாட்கள் தெல்தெனிய பிரதேசத்தில் நடந்த சம்பங்களை கொண்டு தமிழ் பாடகங்கள் என்னை குற்றம் சுமத்தி னர். அந்த எல்லா குற்றச்சாட்டுகளையும் எதிர்க்கின்றேன்.
நான் அங்கு உறவினரின் மரண வீட்டிற்கு சமுகமளித்ததுடன் பிழை செய்யாது கைது செய்யப்பட்ட பிள்ளைகளை விடுவிப்ப தற்கு தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு சமுகமளித்தேனே தவிர வேறு எந்த நோக் கமும் இல்லை என்பதை என்மீது குற்றம் சுமத்திய எல்லோருக்கும் ஞாபகப்படுத்து கின்றேன்..
அவ்வாறே ஜனாதிபதியின் தலைமையின் கீழ் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஆசிரியர் கள் நியமனம் வழங்கும் விழாவில் தேசிய கீதம் இசைகப்பட்ட சந்தர்ப்பத்தில் எழுந்து அதற்கு மதிப்பளிக்க வில்லை என குற்றம் ச. எட்டினர். இதற்கு விடையளிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகின் றேன்.
எந்தவொரு நாட்டிலும் தேசிய கீதம் பாட வேண்டுமே தவிர அது இசைக்கப்படக்கூடா து. நாடு இனங்கள் தொடர்பாக எவ்விதமான கெளரவக் குறைவும் எனக்குள் இல்லாதது டன் சம்பிராயத்தை விடுத்து செயற்படுதல் என்பதை நான் எதிர்க்கின்றேன்.
இது ஆழமாக கலந்துரையாடவேண்டிய விடயம்; இறுதியாக மத வாதத்துடனும் இனவா தத்துடனும் பிரச்சினைகளுக்கு முடிவுகாண முடியாது என்பதுடன் நாட்டின் நீதி அனை வருக்கும் பொதுவானதாக இருக்க வேண் டும் அப்போதுதான் இந்த பிரச்சினைகளை முடிந்தளவு முடிவுக்கு கொண்டுவரமுடியும். |
மீண்டும் இவ்விதமான இனங்களுக் இடையே துரதிர்ஷ்ட வசமான இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது இருக்க இதனை அனைவரும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.