அம்பாறை நகரில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறித்த சம்பவத்துக்கு பொறுப்பானவர்களை காலதாமதமின்றி சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டுக்கு நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவர் என்ற வகையில் குறித்த சம்பவம் தொடர்பில் வெளியிட்டு அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“பல்லினம் மற்றும் பல் கலாச்சரம் கொண்ட நாடு என்ற வகையில் இலங்கையர்கள் தேசிய ஒற்றுமையுடன் ஒவ்வொருவரினதும் வேறுபட்ட தன்மையை மதித்து, பாராட்டி நாட்டுக்கும் உலகத்துக்கும் வழங்கிவரும் முன்மாதிரியை எந்தவிதத்திலும் சேதப்படுத்தாமல் இருப்பதற்கு அனைத்து சமூகங்களும் உறுதிகொள்ளவேண்டும்.” தேசிய ஒருமைப்பாட்டுக்கு நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமாகிய சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.