சிலருக்கு சண்டைகள் நடைபெற்றால் அதனை புதினம் பார்ப்பதில் அலாதிப்பிரியம். கிந்தோட்டை கலவரம் இடம்பெற்ற போதும், அங்கு பிரதமர்சென்றிருந்தார். பாதிக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டிருந்தார். தீர்வுகிடைக்கும் வகையில் எதுவும் செய்யவில்லை. இவர் பார்வையிட்டதுக்கும்சாதாரண ஒரு மகன் பார்வையிட்டதுக்கும் இடையில் எந்தவிதமான வேறுபாடும்இருக்கவில்லை. எதிர்வரும் சனிக்கிழமை பிரதமர் அம்பாறை வரப்போகிறாராம்.இவரின் வருகையை சாதாரண மக்கள் புதினம் பார்க்க வருவதை போன்றே நோக்கமுடிவதாக பானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான்தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை முஸ்லிம்கள் அழுத்கமைக்கு நீதியை நிலை நாட்டக் கோரி, இந்தஅரசை தங்களது முழுமையான ஆதரவோடு அமைத்திருந்தார்கள். தற்போது இந்தஅரசில் அதனோடு சேர்த்து கிந்தோட்டைக்கும், அம்பாறைக்கும் நீதியை நிலைநாட்ட வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதுவரையும் இவற்றுக்கு நீதியைபெற்றுக்கொடுக்கும் எந்தவிதமான உருப்படியான செயற்பாடுகளும் இவ்வரசின்காலத்தில் நடைபெறவில்லை.
எதிர்வரும் சனிக்கிழமை பிரதமர் அம்பாறை வருவதால் பெரிதாக எதுவும்நிகழ்ந்துவிடப் போவதில்லை. குறித்த சம்பவம் உக்கிரமடைந்த வேளை, அவர் களவிஜயம் செய்திருந்தால், அவரை பாராட்டியிருக்கலாம். அது கலவரத்தைஉக்கிரமடைய வைக்காது தடுத்திருக்கும். கிந்தோட்டை கலவரத்தின் போதும்பிரதமர் இப்படியான ஒரு விஜயத்தை செய்திருந்தார். நஸ்டயீடுவழங்கப்போவதாக கூறியிருந்தார். விசாரணைக்காக ஒரு குழுவையும்அமைத்திருந்தார். அவைகள் வார்த்தைகளோடு மாத்திரமே இருந்தன. செயல்வடிவம் பெறவில்லை. நஸ்டயீடும் வழங்கப்படவில்லை விசாரணைக்காகஅமைத்த குழுவின் அறிக்கை என்னவென்றும் யாருக்கும் தெரியவில்லை. இதேவடிவத்தில் அம்பாறை பிரச்சினைக்கும் ஏதாவது செய்வார்கள்.
எதிர்வரும் சனிக்கிழமை பிரதமரின் அம்பாறை வருகை பயனுள்ள வகையில்அமைய வேண்டும். இனவாதிகளுக்கு எதிராக நீதி நிலை நாட்டப்படல்வேண்டும்.வெறுமனே வருகை தந்து, எதனையும் உருப்படியாக செய்யாதுசெல்வதை விட வராமலே இருக்கலாம் என குறிப்பிட்டார்..