உங்களது நாற்பதாவது நூலின் வெளியீட்டுப் பின்னணி குறித்து கூறுங்கள்?
கடந்த 5ஆண்டுகளாக நான் மேற்கொண்ட சில ஆய்வுகளும் நடப்பு வருடத்தில் மேற்கொண்ட ஆய்வுகளும் உள்ளடங்கலாக இந்நூல் வெளிவருகின்றது. இலங்கை முஸ்லிம்கள் குறித்து ஒரு முழுமையான சித்திரத்தை இந்நூல் தருகின்றது என நம்புகின்றேன். அந்த வகையில் முஸ்லிம்களின் சமூகவியல், சனத்தொகை, கல்வி, பொருளாதாரம், அரசியல், வரலாறு, சமூக நிறுவனங்கள், முஸ்லிம் புலமைத்துவம், சமூகப் பிரச்சினைகள், முஸ்லிம் தனியார் சட்டம் ஆகிய பத்து பிரதான அத்தியாயங்களை உள்ளடக்கி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்பாக உள்ள பகுதியில் மாவட்ட ரீதியில் முஸ்லிம்கள் வாழும் கிராமங்களும் ஊர்களும் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன. புதிய அரசியல் மாற்றத்தில் முஸ்லிம்கள் எதிர்பார்ப்பது என்ன என்ற கட்டுரையும் அதில் உள்ளடங்குகின்றது.
416 பக்கங்களைக் கொண்ட இந்நூல் சமகால இலங்கை முஸ்லிம்கள் குறித்து ஒரு தரவுப்பகுப்பாய்வு ஆவணமாக இருக்குமென்பது எனது நம்பிக்கை. இந்நூலில் இடம்பெறும் ஒவ்வொரு அத்தியாயம் குறித்து விரிவாக ஆராய விரும்புகின்றவர்களுக்கு அது ஒரு அடிப்படையாக இருக்குமெனக் கருதுகின்றேன்.
இதற்கு முந்திய உங்களது எழுத்து முயற்சிகள் எவை தொடர்பானவை?
ஏற்கனவே எழுதப்பட்டவற்றில் சில மொழிபெயர்க்கப்பட்டவை. 4 நூல்கள் அவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஏனையவை உசாத்துணை நூல்களையும் கட்டுரைகளையும் அடிப்படையாக கொண்டவை. தற்சிந்தனை வாய்ந்த நூல்களும் அதில் உள்ளன. 2002 இல் எனது முதல் நூல் வெளியானது.
நவீனத்துவத்தின் தோல்வி எனும் அந்நூலுக்கு பேராசிரியர் கா.சிவத்தம்பி அணிந்துரை வழங்கினார். வாழைச்சேனை நண்பர் ஏ.பி.எம்.இத்ரீஸ், அவரது உயிர்ப்பை தேடும் வேர்கள் என்ற பதிப்பகக்தின் மூலம் இந்நூலை வெளியிட்டார். இந்நூல் ஐரோப்பிய சிந்தனைகளை மறுவாசிப்புக்கு உட்படுத்துகின்றது. 8 கட்டுரைகளை உள்ளடக்கிய இந்நூலின் மொழி சற்று கறாராகவே இருந்தது. இச்சந்தர்ப்பத்தில் நண்பர் இத்ரீஸை நன்றியுடன் நினைவுகூருகின்றேன்.

எத்துறை சார்ந்த நூல்களை அதிகம் எழுதியுள்ளீர்கள்?
எனது தேடலும் ஆய்வும் 8 துறைகளை தழுவியவை. வரலாறு, சர்வதேச உறவுகள், உளவியல், தத்துவம், கல்வி, பின் கொலனித்துவம், இஸ்லாமிய சட்டம் போன்ற துறைகளில் எனது நூல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக சர்வதேச உறவுகள் மற்றும் உளவியல், கல்வி தொடர்பான நூல்களே அதிகம் வெளிவந்துள்ளன. ஒப்பீட்டு ரீதியில் சர்வதேச உறவுகள் தொடர்பான நூல்களே அதிகம் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உளவியலில் குழந்தை உளவியல், குடும்ப உளவியல், பெற்றோரும், பிள்ளைகளின் கல்வியும் குழந்தைகளின் அசாதாரண நடத்தைகள் கட்டிளமைப்பருவ உளவியல், இளைஞர்களின் நடத்தை பிறழ்வுகள் போன்ற நூல்கள் வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றவை.

எழுதுவதற்கான நேரம் என்று குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியுள்ளீர்களா?
எழுதுவதற்கு மனோநிலை (Mind) முக்கியமானது. நாம் விரும்பும் எல்லா நேரங்களிலும் எழுதமுடியாது. அதற்கென உடல் உற்சாகமும் உள உற்சாகமும் தேவை.
சில போது தேவையும் நிர்ப்பந்தமும் எழுத தூண்டும் அந்நேரத்திலும் எழுதவேண்டியுள்ளது. தற்சிந்தனை வாய்ந்த கருத்துக்களையும் அவதானங்களையும் எழுதுவது எவருக்கும் எளிதானது.
ஆனால், ஒரு பிரச்சினையின் மையத்தை சரியாக மதிப்பிடுவதாயின் அதற்கென்று தரவுகளை சேகரிப்பதும் பகுப்பாய்வு செய்வதும் முக்கியம். இது சற்று காலத்தை எடுத்துவிடக்கூடியது. அதிக நேரம் இதற்குத் தேவை. எனவே, எழுத்து தாமதமாவது இயல்பானது.
ஆனால், ஆழ்ந்த ஆய்வும் தேடலும் எழுத்தாக வரும்போது அதன் செறியும் வீச்சும் கனதியானதாக இருக்கும்.
இது எனது அனுபவம். இலங்கையில் முஸ்லிம் கல்வி எனும் எனது நூலும் இஸ்லாமிய எழுச்சியின் முன்னோடிகள் எனும் நூலும் மிகுந்த பிரயத்தனத்துடன் எழுதப்பட்டவை.

சமூகத்தில் வாசிப்பு பழக்கம் தூர்ந்து செல்லும் நிலையில் புத்தகங்களின் இடங்களை சமூக ஊடகங்கள் விழுங்கிவரும் இக்காலகட்டத்தில் எழுத்தாளன் முகம்கொடுக்கும் சவால்கள் என்ன?
இது ஒரு பெரிய பிரச்சினையே. ஏனெனில் ஏற்கனவே வாசிப்பு ஆர்வம் மிகக்குறைவாக இருந்த சமூகத்தில் சமூக வலைத்தளங்கள் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன.
இதனால் வாசிப்பு மீதான ஆர்வம் இன்னும் குறைவடைவதற்கான வாய்ப்பே உள்ளது. இந்நிலையில் எழுத்தாளர்கள் தமது நிலைப்பாடுகளை தக்கவைப்பது சிரம சாத்தியமானது. ஆயினும் நடைமுறை யதார்த்தம் ஒன்று இங்கு உள்ளதை நாம் கவனிக்க வேண்டும். எவ்வளவுதான் சமூக ஊடகங்கள் விரிவடைகின்றபோதும் சீரியஸான, ஆய்வுத்தன்மையுள்ள ஆழ்ந்த விவகாரங்களை அச்சு ஊடகங்கள் வாயிலாகவே அறியவேண்டியுள்ளது. இதற்கு பிரதானமாக இரண்டு காரணங்கள் உள்ளன.
முதலாவது, சமூக வலைத்தளங்களில் சீரியஸான ஆய்வுகள் வருவதில்லை. அவை லைட் ரீடிங், வாசகர்களுக்கு தீனி போடுபவை. இரண்டாவது சீரியஸான எந்தவொரு சமூக வலைத்தள கட்டுரைகளையும் எவரும் முழுமையாக கணனித்திரையில் வாசிக்க முடியாது. அவர் குறைந்தபட்சம் அதனை பிரதி எடுத்தே வாசிக்க வேண்டும்.
இவ்வாறான காரணங்களால் நூல்களின் கிராக்கி முற்றிலும் இல்லாமல் போகாது. அவை எப்பொழுதும் வாசிக்கப்பட்டே ஆகவேண்டுமென்ற நிலை நீடிக்கும். இதுவே எழுத்தாளர்களுக்குள்ள ஒரே நம்பிக்கை.

வெற்றிகரமான எழுத்தாளர்களின் வாசிப்பு எப்படியிருக்க வேண்டும் என கருதுகிறீர்கள்?
வாசிப்பு இல்லாமல் எழுத்து இல்லை. நாம் வாசிக்கும் ஒவ்வொரு புதுப்புது தருணத்திலும் நமக்குள் அறியாமை இருக்கின்றது என்பதையே உணர்கின்றோம். பிளேட்டோ சொன்னது போல் எனது அறியாமையைத் தவிர நான் எதனையும் அறிந்தவன் அல்ல என்ற பிரக்ஞையே வாசிக்கும் போது மேலிடுகின்றது.
ஒருவர் தேர்ந்த வாசிப்பாளராக இருக்கும்போதே அவர் விரிந்த அளவில் சிந்திக்க தொடங்குகின்றார். பல்வேறு கருத்துக்கள், சிந்தனைகள் என்பவற்றை ஆழ்ந்து படிக்கும்போது அவற்றிலிருந்து தனக்கான ஒரு சிந்திக்கும் முறையை அவர் வகுத்துக்கொள்கின்றார். இது கலை இலக்கிய எழுத்து போன்றதல்ல சமூக மாற்றத்திற்கான எழுத்து. ஆய்வையும் தேடலையும் அடிப்படையாக கொண்டவை. தரவுகளிலிருந்தே உண்மைகள் பெறப்படுகின்றன.
முடிவுகள் எட்டப்படுகின்றன. தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
நாம் வாழும் யுகம் தரவுகளின் யுகம். தரவுகள் இல்லாமல் யாரும் சமூகப்பிரச்சினைகளை துல்லியமாக பேச முடியாது. எனவே வாசிப்பு இங்கு பல்வேறு நோக்கங்களைக் கொண்டது. கருத்துக்கள் சிந்தனைகளை மட்டுமன்றி தரவுகள் புள்ளி விபரங்களையும் உள்ளீர்க்கின்ற வகையில் வாசிப்பு அமைய வேண்டும்.
இன்னொருபக்கம் அவற்றை சரியான எழுத்தில் கொண்டுவருவதற்கான முன்வைப்புத் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். முன்வைப்புத் திறனில் மொழி முக்கியமானது.

வாசகர்களை கவர்ந்திழுக்கும் மொழி தமிழில் கைகூட வேண்டுமாயின் அதற்கென எத்தகைய எழுத்தாளர்களின் படைப்பிலக்கியங்களை வாசிக்க வேண்டுமென நினைக்கின்றீர்?
90 களில் “கணையாளி” என் கவனத்தை ஈர்த்த முக்கிய இதழ். “சுபமங்களா” அருமையான மொழியின் உறைவிடம். காலச்சுவடு, தீரா நதி, புதிய கலாசாரம், உயிர்மை போன்ற சமகால தமிழகத்து இலக்கிய இதழ்களை தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இவற்றை நான் மொழி வளத்தை செறிவாக்கி கொள்ளும் நோக்கில் வாசிக்கின்றேன்.
சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், பிரமிள், சுஜாதா, ஞானக்கூத்தன், புதுமைப்பித்தன் போன்ற எழுத்தாளர்களின் நாவல்களும் கதைகளும் ஒரு விடயத்தை எப்படிச்சொல்ல வேண்டுமென்பதற்கான உத்திகளை நமக்கு கற்றுத்தருகின்றன. நாம் எதைச் சொல்கின்றோம் என்பது முக்கியம். அதைவிட அதை எப்படிச் சொல்கின்றோம் என்பது முக்கியம்.
எல்லாவற்றையும் இலக்கிய நயத்தோடு சொல்லவேண்டுமென்பதல்ல. பேசுபொருள் சார்ந்து நாம் தெரிவுசெய்யும் மொழி வேறுபடலாம். உதாரணமாக விஞ்ஞானம் அல்லது தத்துவம் அல்லது சமூகவியல் பற்றி நாம் பேசும்போது கதை இலக்கியத்தின் மொழியை அங்கு பிரயோகிப்பதில்லை. ஆனால் எதையும் தெளிவாகவும் சொற்சுருக்கமாகவும் கருத்துச்செறிவாகவும் சொல்வதற்கான ஒரு மொழி எழுத்தாளனுக்கு கைகூடவேண்டும்.

ஒரு நூலின் வெற்றி என்று எதைக் கருதுகின்றீர்கள்?
ஒரு புத்தகம் பூரண நிலை எய்திய ஒரு கலைப்படைப்பன்று. ஒரு புத்தகத்தின் சாதனை அது புத்தகமாவதல்ல. மாறாக அது பொதுமக்கள் பரப்பில் எத்தகைய அதிர்வை உருவாக்குகின்றது என்பதிலேயே அதன் சாதனை தங்கியுள்ளது. வாசகர்களின் உள்ளங்களை தைத்து சிந்தனையை கிளறும் எந்தவொரு நூலும் வெற்றி பெற்றுவிட்டது என்றே கூறவேண்டும் உலகில் மிக அதிகம் விற்பனையான நூல்களின் பட்டியலை நோக்கினால் இவ் உண்மையை புரிந்துகொள்ளலாம். எதையும் யாரும் எழுதிக்குவிக்கலாம் ஆனால் அவர் வெற்றிபெற்ற எழுத்தாளராய் இருக்க முடியாது.

நூல் வெளியீட்டு முயற்சியில் உள்ள பிரதான சவால்கள் என்ன?
தொடர்ச்சியான எழுத்தாளர்களுக்கு எக்கச்சக்கமான சவால்கள் உள்ளன. அச்சகத்திற்கு பெருந்தொகையான பணத்தை ஒரே முறையில் செலுத்த வேண்டும். நூல்களுக்கு எந்த மதிப்பும் இல்லாத வாசிப்பின் ஆர்வம் அற்ற ஒரு சமூக அமைப்பில் புத்தகம் வெளியிடுவது என்பது கிட்டத்தட்ட ஒரு தற்கொலை முயற்சிதான்.
காலம், நேரம், முயற்சி, பணம் என்று ஏகப்பட்ட முதலீடுகள் தேவைப்படுகின்றன. ஆனால், மறுபக்கம் இதற்கு கிடைக்கின்ற சமூக அங்கீகாரமும் சந்தை வாய்ப்பும் மிகக்குறைவாகவே உள்ளன.
இதனால்தான் அத்தி பூத்தால்போல் புத்தகம் வெளியிடுகின்றவர்கள் வெளியீட்டு விழாவை தமது செலவை ஈடுசெய்யும் வகையில் தடல்புடல் என்று நடத்துகின்றனர். அந்த நூலோடு அவரை கண்டுபிடிப்பது கடினமாகின்றது. இன்னொரு பக்கம் தொடர்ச்சியாக எழுதுகின்றவர்கள் ஒரு வாசகர் வட்டத்தை தக்கவைத்துக் கொள்கின்ற வாய்ப்புமுள்ளது.
அவர்கள் எப்படியேனும் அந்த எழுத்தாளனது நூலை தேடிவாசிக்கின்றனர். அதனால் நூல்கள் ஏதோ ஒரு வகையில் தீர்ந்து போகின்றன. என்னைப் பொறுத்தவரையில் ஆயிரம் நூல்கள் பெரும்பாலும் மூன்று மாத இடைவெளியில் விற்பனையாகிவிடும். கடந்த 20 ஆண்டுகால இடைவெளியில் 55000 நூல்களை அச்சிட்டுள்ளேன். அதில் ஒவ்வொரு பிரதி மட்டுமே என் கைவசம் உள்ளது.

இலங்கை, இந்திய சூழலில் உங்களது நூல்கள் மீள்பதிப்பு பெற்றுள்ளனவா?
மீள்பதிப்பில் எனது ஆர்வம் கொஞ்சம் குறைவாகவே உள்ளது. அதைவிட புதிய தலைப்பில் இன்னொரு நூலை எழுதுவதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றேன்.
எனினும் இலங்கையில் இஸ்லாமிக் புக் ஹவுஸ் எனது சில நூல்களை மீள்பதிப்பு செய்துள்ளது. சென்னையை தளமாககொண்ட புதிய விடியல் மற்றும் திண்ணைத் தோழர்கள் பதிப்பகம், மதுரையை தளமாகக்கொண்ட மெல்லினம் பதிப்பகம் என்பனவும் இதுவரை 4 நூல்களை மீள்பதிப்பு செய்துள்ளன. எனது அனைத்து நூல்களையும் மீள்பதிப்பு செய்வதற்கான ஒப்பந்தமொன்றை தமிழக பதிப்பகத்தாருடன் மேற்கொண்டுள்ளேன்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் ஆகியவற்றிலும் எனக்கு ஒரு வாசகர் வட்டம் உள்ளது. அவர்கள் தொடர்ந்து எனது நூல்களை வாசிக்கின்றனர். கைவசம் இல்லாத தலைப்புக்களையும் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு கேட்கின்றனர். 40ஆவது நூலுக்கு பின்னர் சில தேர்ந்த தலைப்புக்களை மீள்பதிப்பு செய்வதற்கான உத்தேசம் உள்ளது.

எதிர்வரும் நூல் வெளியீட்டு விழா குறித்து சொல்லுங்கள்?
எனது 40 நூல்களிலும் ஏற்கனவே 3 நூல்களுக்கே வெளியீட்டு விழா நடந்தது. இப்போது 4ஆவது நூல் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படுகின்றது.
இது எனது 40ஆவது வயதில் வெளிவரும் 40ஆவது நூல் என்ற வகையிலும் 416 பக்கங்களை கொண்ட ஓர் ஆய்வு நூல் என்ற வகையிலும் சமகால இலங்கை முஸ்லிம் சமூகம் தொடர்பானது என்ற வகையிலுமே இந்நூல் வெளியீட்டு விழா ஒன்றை காண்கின்றது. அல்ஹம்துலில்லாஹ் கொழும்பு, தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் எதிர்வரும் செவ்வாய் 29.11.2016 மாலை 06.30 மணியளவில் இந்நூல் வெளியிடப்படுகின்றது.
பிரதம அதிதியாக கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி, விழா தலைவராக கலாநிதி இனாமுல்லாஹ், நூல் ஆய்வாளராக அஷ்ஷெய்க் பிர்தௌஸ் (நளீமி) ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் சமூக ஆர்வலர்கள் இவ்விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.