புனரமைக்கப்பட்டுள்ள இஸ்லாமாபாத் நகரின் சர்வதேச பௌத்த நிலையத்தினை மீள திறந்து வைக்கும் நிகழ்வும் இன்று பிற்பகல் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.
நேபாளம், இந்தியா, மியன்மார், கொரியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா, சீனா மற்றும் மலேசியா போன்ற பௌத்த மதத்தை பின்பற்றும் நாடுகளின் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பாகிஸ்தான் சென்றுள்ள ஜனாதிபதி அந்நாட்டு பிரதமர் சஹீத்கான் அப்பாஸை இன்று பிற்பகல் சந்திக்கவுள்ளார்.
இரு அரச தலைவர்களுக்குமிடையிலான இருதரப்பு கலந்துரையாடலின் பின்னர் கல்வி, இளைஞர் விவகாரங்கள் மற்றும் சுற்றுலாத் துறைகளில் இருநாடுகளுக்குமிடையிலும் நான்கு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன