புத்தபிராண் மும்முறைகள் விஜயம் செய்த இலங்கைப் பூமியில் இனங்களை அடிப்படையாக வைத்து அடித்தும் தாக்கியும் கொலை செய்து கொள்வது கவலை அளிப்பதாக ஆதிவாசிகளது தலைவர் ஊருவரிகே வன்னியலெத்தோ தெரிவித்தார்.
துற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினை மற்றும் இன மோதல் தொடர்பாக அவர் விடுத்து வேண்டுகோளில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொறாமை, குரோதம், வன்மம், பேராசைபோன்ற காரணங்களினாலேயே இவ்வாறான மோதல்கள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ள அவர், சமயங்கள் மேற்படி துர்க் குணங்களிலிருந்து இருந்து விடுபடும் படி கூறிய போதும் அனேகர் மேற்படி துர்க் குணங்களை தம்மகத்தே வைத்துக் கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இனம், சமயம், மற்றும் அரசியல் கட்சி என்ற அடிப்படையில் பிளவு பட்டு தாக்கிக்கொள்ளும் மனிதர்கள் சிந்திக்க வேண்டும். சகல தரப்பினரது உடலிலும் ஓடுவது சிவப்பு நிறக் குருதி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சிங்கள, முஸ்லிம், தமிழ் என்று குருதிப் பிரிவுகளை பிரித்தெடுக்க முடியாது.
ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டு இருப்பதை விட அரச கட்சிகளும் எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து பேச்சு வாரத்தையின் அடிப்படையில் நடவடிக்கைகளை முன் எடுத்து பிரச்சினைகளைத் தீர்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.