ஐக்கிய தேசியக் கட்சி அன்று மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிட்டது கட்சியை வெற்றிபெற வைப்பதற்கு வேட்பாளர் ஒருவர் இல்லாமையினாலேயே அன்றி, மைத்திரிபால சிறிசேனவின் மீதான அன்பினால் அல்லவென உள்ளுராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் மலர் மலர்வதற்கு முடியுமாக இருப்பதற்கு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக அன்று வெற்றி கொண்டமையே ஆகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து குறுகிய காலத்துக்குள் பாராளுமன்றத் தேர்தல் வந்தது. இதன்போது பெரும்பான்மைப் பலத்தை பெற்றுக் கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு முடியாமல் போனது. இதனாலேயே நல்லிணக்க அரசாங்கமொன்றை ஏற்படுத்தியது. அத்தேர்தலில் ஐ.தே.கட்சிக்கு 113 உறுப்பினர்கள் கிடைக்கப் பெற்றிருந்தால் அக்கட்சி தனியாட்சியே அமைத்திருப்பார்கள். இதுதான் உண்மை எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
ஐ.தே.கட்சிக்கு வேட்பாளர் ஒருவர் இல்லாமையினாலேயே ஒரு முறை சரத் பொன்சேகாவை போட்டியிடச் செய்து வாங்கிக் கட்டிக் கொண்டது எனவும் நேற்று ஸ்ரீ ல.சு.க.யின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.