கண்டி திகன பகுதியில் பதற்றம் நிலை ஏற்பட்டுள்ளதாக வெவ்வேறு வகையில் பரவும் செய்திகளில் உண்மையில்லை என முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தரும் இம்முறை இரட்டை இலையில் மெததும்பர பிரதேச சபைக்கு போட்டியிட்ட மெததும்பர பிரதேச சபை உறுப்பினருமான சகோதரர் பாஸில் தெரிவித்தார்
நேற்றைய தினம் அம்கஹலந்த பள்ளிவாயலில் பௌத்த மதகுருமார் மற்றும் பொலிஸாருடன் பேசி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக கூறிய அப்பிரதேசத்தின் ஊடாக பயணித்தவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்ட போதும் அது தொடர்பில் எந்த ஒரு பாரிய தடயங்கள் இல்லை என குறிப்பிட்டார்.
இன்று காலையும் நேற்றும் தான் உள்ளிட்ட குழு மரண வீட்டுக்கு சென்று வந்ததாக கூறிய அவர் பிரதேசத்தில் எந்த ஒரு அசம்பாவிதமும் இடம்பெறவில்லை எனவும் ஒரு மரணம் நிகழ்ந்துள்ளதால் ஒரு அச்சநிலையே காணப்படுவதாக கூறினார்.
பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் தாங்கள் பொலிஸ் உயரதிகளுடன் தொடர்ந்து கதைத்து வருவதாகவும் போதுமான அளவு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர் ,
இந்த சம்பவம் தொடர்பில் வீனான வதந்திகளை பரப்பி வெளி இடங்களில் இருக்கும் மக்களை குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம் என அனைவரிடத்திலும் தான் மோதுவதாக அவர் கூறினார்.
எது எவ்வாறாக இருப்பினும் முஸ்லிம்கள் அவதானத்துடனும், அறிவுடனும் இருப்பது நல்லது. (ம-நி)
எது எவ்வாறாக இருப்பினும் முஸ்லிம்கள் அவதானத்துடனும், அறிவுடனும் இருப்பது நல்லது. (ம-நி)