அம்பாறை சம்பவம்: அமைச்சர் ஹக்கீமின் தலைமையில் இன்று விசேட சந்திப்பு

NEWS


அம்பாறை கலவரம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும்‌ விசேட சந்திப்பொன்று இன்று (03) காலை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்றதாக அக்கட்சியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இச்சந்திப்‌பில் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மு.கா. செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான், கட்சியின் வெளிவிவகார பணிப்பாளரும் சட்டத்தரணியுமான ஏ.எம். பாயிஸ், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆகியோர் கலந்துகொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இன்று(03) மாலை இடம்பெற்ற பிரதமருடனான இரண்டாம் கட்ட சந்திப்பிற்காக  அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று ஜனாதிபதியுடன் செல்லவிருந்த மட்டக்களப்பு பயணமும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அக்கட்சி மேலும் குறிப்பிட்டுள்ளது.
6/grid1/Political
To Top