சிரியா: போர் நிறுத்தம் தோல்வியால் மனிதநேய உதவிகள் பாதிப்பு!

NEWS


உருவாக்கப்பட்டிருக்கும் 5 மணிநேர போர் நிறுத்தம், சிரியா அரசு படைப்பிரவுகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடைபெறும் போரை தடுப்பதற்கு 2வது நாளாகவும் தோல்வியடைந்துள்ளது.

கிழக்கு கூட்டாவில் முற்றுகையிடப்பட்டுள்ள கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள பகுதிக்கு உதவி பொருட்களை வழங்குவதற்கு தாக்குதலில் தினமும் இடைவெளி வழங்க சிரியா அரசின் ரஷ்ய கூட்டணி படைகள் அனுமதித்துள்ளன.

இந்தப் போர் நிறுத்தம் தொடங்க இருந்த நிலையில் வான்வழி தாக்குதலும், ஆர்டிலரி குண்டு தாக்குதல்களும் நிறுத்தப்பட்டதாக தோன்றின.
ஆனால், அரசு படைகளின் குண்டு தாக்குதல் மீண்டும் தொடங்கியது என்று எதிர்தரப்பு குழுவினர் பின்னர் தெரிவித்தனர்.


தான் உருவாக்க முயலுகின்ற மனிதநேய உதவி வழங்குவதற்கான பாதையை பயன்படுத்த முடியாதபடி கிளர்ச்சியாளர்களின் ஷெல் தாக்குதல் அமைந்துள்ளது என்று ரஷ்யா கூறுகிறது.

இதனை கிளர்ச்சியாளர்கள் மறுத்துள்ளனர். கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நடந்த தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

BBC
6/grid1/Political
To Top