மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு விகாரை,பொலநறுவை விகாரை போன்றவற்றில் சிங்கள மக்கள் பேரூந்தில் வந்திருப்பதாக தகவல் பரவிக் கொண்டிருந்த நிலையில் தகவலின் உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காக விஷேட இராணுவ படையினர் குழுவொன்று குறித்த விகாரைகளுக்கு விஜயம் செய்து உண்மை நிலையை கேட்டறிந்துள்ளனர். இங்கு கூறப்படுவது போன்று அங்கு எந்தவித சிங்கள மக்கள் குழுவினரும் வரவில்லை என தெரிவித்தனர்.
மேலும், கிழக்கு மாகாணத்தில் பல பிரதேசங்களில் இராணுவ தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே வேறு யாரும் நமது மாவட்டங்களில் நுழைய முடியாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை பிரதேசத்திலும் பதற்றம் நிலவுவதாக செவியுற்றேன் அங்கும் எந்தவிதமான பதற்றங்களும் ஏற்பாவில்லை.. கடற் படையினர் மற்றும் விஷேட அதிரப்படையினர் கண்காணித்து கொண்டு இருக்கின்றார்கள். ஆகவே மக்களிடையே வீணாண வதந்திகளைப் பரப்பி மக்களிடத்தில் அச்ச நிலையை ஏற்படுத்த வேண்டாம்.
மற்றும் இப்பிரச்சினை முற்றுமுழுதாக இல்லாமல் போக வேண்டுமென்று அல்லாஹ்விடத்திலும் துஆக்களைக் கேட்டுக் கொள்ளுமாறும் இராஜாங்க அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
எம்.ஜே.சுஹைல்
சிலோன் முஸ்லிம் நிருபர்
எம்.ஜே.சுஹைல்
சிலோன் முஸ்லிம் நிருபர்