மல்வத்தை வீதியில் அகற்றப்படவிருந்த கடைத் தொகுதிகள் பைஸர் முஸ்தபாவினால் முறியடிப்பு

NEWS


( ஐ. ஏ. காதிர் கான் )

   கொழும்பு - புறக்கோட்டை, மல்வத்தை வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நடை பாதைக் கடைகளை, அங்கிருந்து அகற்றுவதற்கு, கொழும்பு மா நகர சபையினால் எடுக்கப்பட்ட முயற்சிகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் தலையீட்டினால் முறியடிக்கப்பட்டுள்ளது.

   இக்கடைத் தொகுதிகள்,  நேற்று (28) அங்கிருந்து மா நகர ஆணையாளர் வீ.கே.ஏ.  அநுரவின் பணிப்புரையின் பேரில், மா நகர அதிகாரிகளினால் அகற்றப்படவிருந்தது.

இக்கடைத் தொகுதிகள் யாவும், மீளவும் புனர் நிர்மாணம்  செய்யப்படவுள்ளதாகவும், உடனடியாக அங்கிருந்து ஒதுங்கிக் கொள்ளுமாறும் கூறி, குறித்த வியாபாரிகளை அங்கு வந்திருந்த அதிகாரிகள் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளனர்.


இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் கவனத்திற்கு உடனடியாகக்  கொண்டுவரப்பட்டுள்ளது. இதனையடுத்து, அமைச்சர் அவ்விடத்துக்கு விரைந்து வந்து, அகற்றப்படவிருந்த அந்நடை பாதைக் கடைத்தொகுதிகளை அவரது முயற்சியால் தடுத்து நிறுத்தியுள்ளார்.



6/grid1/Political
To Top