நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக எம்.ஏ.எம்.தாஹிர் நேற்றைய தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, உப தவிசாளராக வை.எல்.சுலைமாலெவ்வை தெரிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் உப தவிசாளரான வை.எல்.சுலைமாலெவ்வை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்,
எமது கட்சியுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக சம்மாந்துறை, நிந்தவூர் ஆகிய பிரதேச சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்கு தவிசாளர் பதவியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு துணைத் தவிசாளர் பதவியும்,
பொத்துவில், இறக்காமம் ஆகிய பிரதேச சபைகளில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு தவிசாளர் பதவியும், அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்கு துணைத் தவிசாளர் பதவியும் பெற்றுக் கொள்ள இணக்கம் காணப்பட்டது.
இதனையடுத்து கடந்த 26ஆம் திகதி எமது கட்சித் தலைமை அலுவலகத்தில் கட்சியின் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் இது பற்றி எனக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இருந்த போதும் நிந்தவூர் பிரதேச சபையானது 06 - 06 எனும் ஆசன நிலையில் காணப்பட்டதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக காணப்படுவதோடு, அந்தக் கட்சி விரும்புகின்ற நேரத்தில் தவிசாளர் பதவியை பெற்றுக் கொள்வதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தான் நேற்று (27) இடம்பெற்ற நிந்தவூர் பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் துணைத்தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் கே.எம்.எம்.ஜாரிஸ் என்னை தவிசாளராக பிரேரிக்க, அக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் எம்.ரி.சப்ராஸ் அதனை ஆமோதித்தார்.
இதனைத் தொடர்ந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக முன்னாள் தவிசாளராக இருந்த எம்.ஏ.எம்.தாஹிர் மீண்டும் அந்தப் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட போதும், கட்சியுடன் நான் கொடுத்த ஒப்புதலுக்கும், கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாகவுமே தவிசாளர் பதவியை விட்டுக் கொடுத்தேனே தவிர கோடிகளுக்கு சோரம் போய், பதவி மோகம் கொண்டு அந்த அமர்வில் செயற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விடயமானது குறிப்பிட்ட சிலரால் சமூக வலைத்தளங்களில் என்னைப் பற்றி பிழையாக விமர்சிக்கப் படுவதோடு, எனது அரசியல் பயணத்தினையும் தவறாக விமர்சித்து வருகின்றனர்.
இருந்தபோதும் சவால்களைக் கடந்தே நிந்தவூரில் அரசியல் பயணம் மேற்கொள்ளவேண்டியிருக்கும் இந்த சூழ்நிலையில் எனக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்களையும், அவர்களின் தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பேன்.
இன்றிலிருந்து நிந்தவூரில் அபிவிருத்திக்காக கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து ஒற்றுமையுடன் செயற்பட அனைவரும் முன்வர வேண்டும். அத்துடன் எனக்கு வாக்களித்த, வெற்றியின் பங்காளிகளாக இருந்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.