ஜே.எம். ஹாபீஸ்
ஹாரிஸ்பத்துவ தொகுதியிலுள்ள நுகவல என்டருதென்ன கிராமத்தில் அகதிகளாக உள்ள சுமார் 300 பேருக்கு அவசர உதவிகள் தேவைப் படுகின்றதாக வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.
மேற்படி இடத்தில் பாடசாலை ஒன்றில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளவர்கள் பற்றி அங்குள்ள மடவளையைச் சேர்ந்த சகோதரர் எம்.ஐம்.எம்.சிப்லி தகவல் தருகையில் குறிப்பிட்டதாவது-
7ம் திகதி காலையில் கிராமம் தாக்கப் படும் போது காடுகளில் ஓடி ஒளித்தவர்களை பி;.ப 4- மணியின் பின்பே இராணுவம் வந்தவுடன் காட்டிலிருந்து அழைத்து வரப்பட்டதாகவும் அதுவரை அவர்கள் எதுவித நீர் மற்றும் ஆகாரமின்றி பயத்தில் ஒளித்திருந்ததாகவும் அதன் பின்னரே குடி நீர் கூட அருந்திய தாகவும் தெரிவித்தார்.
இராணுவ தலைமையகத்துடன் தொடர்பு கொண்ட போது மாவட்ட செயலாளர் உணவுகள் அனுப்பி உள்ளதாகத் தெரிவித்த போதும் எது வித உதவியும் கிடைக்கவில்லை என்றும் இக்கிராமத்தில் உள்ள ஒரே ஒரு கடையில் இருந்த பொருட்களை மட்டுமே எடுத்து இரவு உணவு சமைத்துக் கொடுக்ப்பட்டதாகவும் பெனடோல் தவிர வேறு எதுவித மருந்து வசதிகளும் இல்லை என்றும் தெரிவித்தார்.
அத்துடன் இங்குள்ள சகல வீடுகளும் சிங்கள கிரமங்களுடன் பின்னிப் பிணைந்துள்ளதாகவும் 175 வீடுகளில் 50 ற்கும் மேற்பட்ட வீடுகள் தாக்கப்பட்டதாகும் 3 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், 300 பேர் அகதிகளாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இவர்களில் 15 கைக்குழந்தைகளும் சிசுக்குளுடனான 6 தாய்மார்களும் மற்றும் 6 கற்பிணிப் பெண்களுக்கும் இருப்தாகவும் தெரிவித்தார்.
ஹாரிஸ்பத்துவ தொகுதியிலுள்ள குருநாகல் பிரதான பாதையில் நுகவல 4ம் கட்டை என்ற இடத்தில் இருந்து உற்புறமாக சுமார் 3 கிலோமீட்டர் சென்றால் இக்கிராமத்தை அடையலாம்.
வேறு பாதைகளும் உண்டு. எனவே முடியுமானவர்கள் அவசர உதவியை வழங்கும்படி கேட்கப்பட்டுள்ளனர்.
காடுகளில் ஓடி ஒளிக்கும் போது காயங்கள் ஏற்பட்டதால் பலருக்கு முதலுதவிகள் தேவைப் படுவதாகுவம் தெரிய வருகிறது.
தொடர்புகளுக்கு எம்.ஐ.எம்.சிப்லி