அரசியல் நோக்கங்களுக்காக தாய்நாட்டை பலிகொடுக்க வேண்டாம்!

NEWS


குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தாய்நாட்டை பழிகொடுக்க வேண்டாம் என அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கண்டி உள்ளிட்ட சில பிரதேசங்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

இந்த சம்பவத்தின் பின்னர், இன, மத, குல மற்றும் ஆத்திரத்தின் அடிப்படையில், அரசியல் மேடைகளை உருவாக்க சிலர் முயற்சித்து வருகின்றனர்.

இது சம்பந்தமாக தேடி அறிய ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து, பொறுப்புக் கூறவேண்டியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.

மேலும், அழிந்த உயிர்கள் மற்றும் சொத்துக்களுக்கு துரிதமாக இழப்பீடுகளை வழங்க வேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
6/grid1/Political
To Top