சவுதி அரசின் தற்கால போக்கு தொடர்பிலும், யூதர்களுக்கு எதிராகவும் குத்பாவில்பேசியதாக கூறப்படும் வயது முதிர்ந்த இமாம் ஒருவர் தடுக்கப்பட்டு இழுத்து செல்லப்படும் காணொளி வைரலாக பரவி வருகிறது.
நேற்று “யான்பு” பகுதி பள்ளிவாசல் ஒன்றின் ஜும்மா பிரசங்கத்தின்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது!
சமகாலத்தில் சவுதி அரசின் போக்குகள் தொடர்பிலேயே குறித்த இமாம் கண்டித்து பேசியபோது இடைநடுவில் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகளாவிய ரீதியில் ஜும்மா உரையின்போது இமாம் ஒருவர் தடுக்கப்பட்ட அல்லது தாக்கபட்ட சம்பவம் இதுவாகத்தானிருக்கும் என பலரும் கண்டித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை சவூதியின் பல பள்ளிவாசல்களில் சிரியா மக்களுக்கான பிரார்த்தனையும் நேற்றைய தினம் தடுக்கப்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இமாம் தாக்கப்பட்ட அல்லது தடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அரச தரப்பு பத்திரிகை ஒன்றில்
“குறித்த இமாம் ஒரு மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் அவர் இமாம் இல்லையென்றும்” கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபலமான பள்ளிவாசல் ஒன்றில் எப்படி போலியான இமாம் ஒருவர் முன்பின் அறிமுகமின்றி அனுமதி பெற்று ஜும்மா பிரசங்கம் செய்ய முடியும் என பலரும் கேள்விக்கணை தொடுத்துள்ளனர்.
இந்த வீடியோ தொடர்பான உண்மைத்தன்மை எப்படியிருப்பினும், சிரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டினை கொண்டுள்ள சவுதி அரசு சிரியா மக்களுக்கான ஆதரவு நடவடிக்கைகள் பேரணிகளுக்கு உள்ளரங்கத்தில் தடை விதித்திருப்பதாகவே தெரியவருகிறது.
அல்மசூறா