அ.இ.ம.காங்கிரசில் ஊடக பிரிவில் கடமையாற்றிய மருதமுனை சம்சுல்.ஏ.றசீட் நாபீர் பெளண்டேசனில் இணைவு.

NEWS


ஓட்டமவடி அஹமட் இர்ஷாட்

சமூக சேவைகள் அமைப்பான நாபிர் பௌன்டேசன் தனது அமைப்பில்  புதிய அங்கத்தவர்களை இனைத்துக் கொள்ளும் நிகழ்வில் ஒரு அங்கமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடக பிரிவில் கடமை புரிந்த மருதமுனையை சேர்ந்த சம்சுல் ஏ. றசீட்சை உத்தியோக பூர்வமாக நாபீர் பெளண்டேசனின் உறுப்பினராக இணைத்து கொண்டுள்ளது.
குறித்த நியமனமானது அண்மையில் சம்மாந்துறையில் உள்ள பெளண்டேசனின் உத்தியோக பூர்வ காரியாலயத்தில் வைத்து அதன் ஊடக இணைப்பாளரும் உயர் பீட உறுப்பினருமான நசீமினால் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் நாபிர் பௌன்டேசன் எனும் சமூக சேவை அமைப்பில் புதிய அங்கத்தவர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வுகள் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்கு பிற்பாடு தொடர்ந் தேர்சியாக இடம் பெற்று கொண்டிருக்கின்றது. அந்த வகையில் கிழக்கிலங்கையில் பெயர் சொல்லும் சமூகம்சார் தொண்டு நிறுவனத்தில் நாபிர் பௌன்டேசனானது முக்கிய அமைப்பாக விளங்குகின்றது. தற்பொழுது குறித்த அமைப்பானது தனது சேவையினை விஸ்தரிப்பு செய்யும் நோக்கில் புதிய அங்கத்தவர்களை உள்வாங்கி தனது சமூகம் சேவையினை விஸ்தரிப்புச் செய்கின்றது.


6/grid1/Political
To Top