Top News

இலங்கை முஸ்லிம்களின் நிலை; ஐ.நாவில் இன்று அறிக்கை கையளிப்பு!


இலங்கையில் இடம்பெற்றுவரும் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் குறித்த, யாழ் சர்வதேச முஸ்லிம் சமூகம் (Jaffna Muslim Community International)  அமைப்பின் பங்களிப்புடன், சிறுபான்மையினர் உரிமைகளுக்கான சர்வதேச குழுமம், ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் 37வது ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில், இன்று 14.03.2018 புதன்கிழமை, கையளிக்கவுள்ள தமது அறிக்கையொன்றில் இலங்கையில் தற்போதைய நிலைமை தொடர்பாக, தெரிவிக்கவுள்ளது.


2015 ம் ஆண்டு, தற்போதைய மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தததிலிருந்து அண்மைய கண்டி வன்முறை வரை ஆவணப்படுத்தப்பட்ட சுமார் 32 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையொன்றை இதற்கென யாழ் சர்வதேச முஸ்லிம் சமூக அமைப்பு கையளிக்கவுள்ளது.

அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்கள் மீண்டும் அச்ச சூழ்நிலையில் அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
Previous Post Next Post