சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் கருவறையாக கருதப்படும் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் மறைந்த முன்னாள் தலைவர் மர்ஹும் MHM அஸ்ரப் அவர்ஹளுடைய காலம் தொட்டு இன்றைவரைக்கும் அக்கட்ச்சியின் எல்லா வளர்ச்சி நிலைகளிலும் சந்தேகத்திற்கு இடமில்லாத பெரும்பன்மை ஆதரவினையும் அர்ப்பணிப்பினையும் தொடர்ச்சியக வழங்கி அக்கட்சியை கிழக்கில் ஆழவேரூன்றி விருட்ச்சிக்க எப்போதும் துணைநிற்கின்ற கிழக்குமகாணத்தின் கல்வி, கலை, கலாச்சாரம், கைத்தொழில் போன்ற எல்லாத்துறைகளிலும் ஏனைய ஊர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கின்ற மருதமுனை மண்ணுக்கு ஏன் இன்றுவரைக்கும் அககுறைந்தது ஒரு முதல்நிலை அரசியல் அதிகாரத்தையேனும் வழங்க முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைய்மையும் பின்னிற்கிறது என்பதே இன்றய மருதமுனை மண்ணின் பேசுபொருளாக மாறியிருகிறது
கல்முனை மண்ணின் இருகண்களாக இருக்கின்ற சாய்ந்தமருதும் மருதமுனையும் தொடர்ச்சியாக கல்முனை பிரதேசத்தின் இடைவெளியற்ற தொடர் அரசியல் அதிகாரத்தினை தன்னகத்தே தொடராக தக்கவைப்பதற்கான அஸ்திரமாக என்றைக்கும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது என்பதில் யாருக்கும் மற்றுக்கருத்து இருக்க முடியாது.
இதுவரைகாலமும் மருதமுனயின் மொத்த வக்கில் கிட்டத்தட்ட 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை தொடரக பெற்றுக்கொள்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் அதனூடாக வெற்றிகொள்கின்ற அதிகாரங்களை சமநிலையாக பகிர்ந்திருகின்றதா என்ற கேள்விக்கு மருதமுனையின் தொடர்ச்சியான அரசியல் புறக்கணிப்பு இல்லை என்றே பதில் கூறிநிற்கிறது அது மாத்திரமன்றி கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பிரேதேசங்களில் தொடர்ச்சியாக எந்தவித அதிகாரமும் வழங்கமல் புறக்கணிக்கப்பட்டுவருகின்ற ஒரே ஒரு ஊர் மருதமுனை மாத்திரமே.
ஆனால் மறுதலயக சந்தமருதுக்கான அரசியல் அதிகாரம் எல்லாக்காலங்களிலும் எல்லா படிநிலைகளிலும் முஸ்லிம்காங்கிரசினால் வழங்கப்பட்டு அம்மண் பெருமைப்படுத்தப்பட்டிருக்கின்றது அவ்வாறு தொடர் அதிகாரம் வழங்கப்பட்டும்கூட அண்மைக்கலமாக முன்வைக்கப்படுகின்ற தனியான தன்னாட்சி அதிகாரசபை கோரிக்கையின்பின்னர் கடந்த உள்ளுராட்சி சபைத்தேர்தலின் தொடக்கத்தில் இருந்தே ஒட்டுமொத்த சாய்ந்தமருது மக்களும் இதுகாலவரையிலும் முஸ்லிம் காங்கிரசுக்கு அளித்துவந்த ஆதரவினை விலக்கி எதிர்த்திசையில் பயணிக்க தொடங்கியிருக்கிறார்கள் இது முஸ்லிம் காங்கிரசின் அஸ்த்திவரத்தினையே ஆட்டம் காணச்செய்து தனது அதரவு தாழத்தினையும் கையிளக்கச்செய்திருகிறது
அதுமாத்திரமல்லாமல் அண்மைக்காலமாக முஸ்லிம் காங்கிரசால் ஏனைய பிரதேசங்களுக்கு அளிக்கப்பட்ட பலவாக்குறுதிகள் மீறப்பட்டதனாலும் கட்சியின் உள்ளக முரண்பாடுகளினாலும், களுதறுப்புகளும் கட்சிதவல்களும் மலிந்துவிட்ட சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரசின் அம்பாறைமாவாட்ட வாக்குவங்கியில் குறிப்பிட்டவிகிதத்தில் பாரிய சரிவினையும் கிடைக்கப்பெற்றிருகின்ற உள்ளுராட்சி சபைத்தேர்தல் முடிவுகளின்படி கடந்தகலங்களில் தன்கைவசம் இருந்த பல சபைகளில் தனியாக ஆட்சியை தீர்மானிக்க முடியாத தொங்குநிலையில் இருக்கிற நிலையில் முஸ்லிம் காங்கிரஷ் தனது அரசியல் முன்னகர்வில் பல தெளிவான மற்றுத்தீர்மானங்களையும் மருசீரமைபுகளையும் மேற்கொள்ளவேண்டிய தேவை உணரப்பட்டிருகிறது
அதிலும் குறிப்பாக கல்முனை பிரேதேசத்தில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியைய் சற்றேனும் சரிசெய்வதட்கு முஸ்லிம் காங்கிரசிற்கு இருக்கிற ஒரேவளி கல்முனை மாநகரசபைக்கான மேயர் பதவியினை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்கனவே கல்முனைக்கும் சாய்ந்தமருதிற்கும் வழங்கியது போல் இம்முறை மருதமுனைக்கு வழங்கி குறைந்தது மருதமுனையின் வாக்கு வங்கியையாவது பலப்படுத்துவதேயாகும்
இது இவ்வாறிருக்க மருதமுனைமக்களும் தங்களுக்கான அரசியல் அதிகாரத்தினை பெருவதற்காக இதுவரை\காலமும் முஸ்லிம் காங்கிரசையே நம்பியிருக்கிறார்கள் இருந்த போதிலும் முன்னாள் உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ALM அதவுள்ளாவினால் மருதமுனைமக்கான தனியான தன்னாட்சி அதிகாரசபை வழங்குவதற்கன நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளபட்டதுவும் மருதமுனை மக்களிடையே ஒரு மற்றீட்டு அதிகாரத்தின் மீது திடமான நம்பிக்கையை விதைத்திருகின்றது அதுமாத்திரமன்றி கடந்த பிப்ரவரி 4ஆம் திகதி மருதமுனையில் யானைச்சின்னத்தில் போட்டியிட்ட R. அமீர் என்பவரை ஆதெரித்து இடம்பெற்ற பிரச்சக்ரகூட்டதில் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹகீம் அவர்களால் தேர்தலின் பின்னர் மருதமுனைக்கு வலுவான அரசியல்அதிகாரம் நிச்சயம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் வழங்கப்பட்ட்டிருப்பது மருதமுனை மக்களின் எதிர்பார்பையும் நம்பிக்கையும் மேலும் வலுப்படுத்தியிருகிறது
மேலும் மருதமுனை மக்கள் முஸ்லிம் காங்கிரசின் தலைவர்மீது இன்னும் நம்பிக்கைவைத்து முஸ்லிம் காங்கிரசின் நீண்டகால போராளியாகவும் கல்முனை பிராந்தியம் முளுவதும் செல்வாக்கும் நற்பெயரும் சிறந்த ஆளுமையும் கொண்ட இருதடவை கல்முனை மாநகரசபைக்கு மக்களால் தெரிவு செயப்பட்ட முன்னாள் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் சர்வேதேச தொளிலாளர் ஆணையத்தின் பிரதிநிதியுமன சிரேஷ்ட சட்டதரணி AM ரகீப் அவர்களை இம்முறை கல்முனை மாநகரசபையின் மேயராக பிரேரிபதற்காக மருதமுனை மக்கள் ஏற்கனவே பல ஒன்றுகூடல்களை நடாத்தி பலதீர்மானங்களை எடுத்திருகிறார்கள் மேலும் மருதமுனை கல்விமான்கள் பேரவை இதற்காக மருதமுனை மக்களை ஒன்றுதிரட்ட மும்மூரமக முஸ்தீபுகள் மேற்கொண்டிருப்பதனையும் முஸ்லிம் காங்கிரசின் தலைமை கருத்தில் கொள்ளவேண்டும் அல்லாமல் முஸ்லிம் காங்கிரசின் தலைமை தான்தோன்றிதனமாக மீண்டும் கல்முனைப்பிரேசதிற்கான மேயர் பதவியை தனுடைய சுயநலத்திற்காக பந்தாடி மருதமுனை மக்கள் முகத்தில் கரிபூச எண்ணுமாக இருந்தால் ஏற்கனவே கல்முனையின் இருகண்களில் ஒன்றன சாய்ந்தமருதை இழந்ததைப்போல் மருதமுனைமண்ணின் மக்களையும் இழக்கும் நாட்டகள் தொலைவில் இல்லை. என்பது உறுதி.
Sanjeer
LLB Kalmunai