ஒரு சமூகத்தின் அடையாளம் அதன் வரலாறு. அந்த வரலாறு எதிர்கால சந்ததிக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும். அந்த முன்மாதிரி நல்லதையும் ஏற்படுத்தும் . கெட்டதையும் ஏற்படுத்தும்.
இஸ்லாமிய வரலாறு இஸ்லாமியர் வரலாறு உங்கள் கண் முன்னே அழிக்கப்படுகிறதே ஏன்? என்பதை யோசிக்கா சமூகம் இது.
பக்கம் பக்கமாக கட்டுரை எழுதினாலும் நூரில் ஒன்று என்று இதையும் கடந்து விட்டுத்தான் போகப்போகிறோம் .அதனால் நானும் நாள் குறிப்பிட்டு நேரம் குறிப்பிட்டு இடம் குறிப்பிட்டு ஆதாரம் கொண்டு கட்டுரை வடிக்க விரும்பவில்லை.
ஒரு நாட்டின் குடிகள் அந்த நாட்டின் வரலாற்று சிறப்பை வைத்து மேலோங்கப்படும், சிறப்பிக்கபடும் . அது அடுத்த சந்ததிக்கு கடத்தப்பட்டு அந்த சமூகம் அந்த சிறப்பை கடைப்பிடித்து பாதுகாத்து பாதுகாப்புடன் வாழும்.
இந்தியாவுக்கு இஸ்லாம் வந்த வரலாறும் , இலங்கைக்கு இஸ்லாம் வந்த வரலாறும் மறைக்கப்பட்டு வந்தவர்கள் மீது பழி பாடும் காரியம் அரச அனுசரனையுடன் திட்டமடலாய் அரங்கேருகிறது.
இந்தியாவை ஆண்ட மன்னர்கள் தொட்டு முஸ்லிம்கள் வாழ்க்கை முறையும் இஸ்லாமிய பரவல் முறையும் அழிக்கப்பட்டு திரிவு படுத்தப்பட்டு பாடப்புத்தகங்களாகவும் , சஞ்சிகையாகவும், காணொலியாகவும் , திரைப்படங்களாகவும் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது.
இலங்கை முஸ்லிம்கள் வரலாறும் அவ்வாறே. திட்டமிட்டு இஸ்லாமிய சமூகத்தின் மீது பொய்கள் பரப்பப்படுகிறது. வரலாற்று சின்னங்கள் நொருக்கப்படுகிறது. வரலாறும் மாற்றப்பட்டு விட்டது. நேற்றைய இஸ்லாமிய சமூகம் துரோகிகள் என்றும் இன்றைய இஸ்லாமிய சமூகம் கேடு கெட்டவர்கள் என்றும் வரலாறு எழுதுகிறது புத்தகமாக ஆனாலும் பார்த்துக் கொண்டுள்ளோம்.
எம் முன்னோரின் சிறப்பை எம் கண் முன் மறைத்து எம்முன்னே நம்மீது பலி போட்டு அடிமையாக்கி அவன் கால் கீழ் வீழ்ந்து விட்டோம்.உண்மையா இல்லையா? நிகழ்கால நிகழ்விலே எம் மீது தவறில்லை என்று அறிந்தும் அடிமைப் பட்டுள்ளோமே நாளை இதே பழிதான் வரலாறாக எம் சமூகம் வாசிக்கும் .அன்று நம்மை விட அடிமையாய் வாழும்...
இந்தக்கட்டுரையை வெரும் எழுத்தால் படிப்பதைக் கொண்டு இதன் உண்மைத் தண்மையும் விளைவும் நிச்சயம் உங்களுக்கு விளங்கப்போவதில்லை. இது தொடர்பான ஆய்வும் விளிப்புனர்வும் இன்னும் எம்மிடம் இல்லை.
இஸ்லாத்தை அழிக்கும் சக்திகள் மீடியாவையும், ரானுவத்தையும், அறிவியலையும் , தொழில் நுட்பத்தையும் கையில் வைத்து எம்மை பூச்சி போல இலகுவாக நசுக்கி விட்டே வந்து கொண்டுள்ளது. இதில் ஒன்று கூட எம்மிடம் உருப்படியாக இல்லாமல் சிதைந்து போய் கிடக்கின்றோம்.
உன் தகப்பன் உத்தமன் என்னும் வரலாற்றுக் பதிலாய் அயோக்கியன் என்று எழுதினால் எவ்வளவு கொதிப்பாயோ அதையும் விட பாரதூரமான ஒன்று நம் கண் முன்னே திரை மறைவில் திட்டமிட்டு நிகழ்த்தப்படுகிறது. நாம் விழித்துக் கொள்ளப்போவதில்லை என்பதை நான் அறிவேன். சமூகம் ஒன்றாகும் வரை ஒரு கருத்து பல சமூகத்தில் ஒன்றான கோசமாக மாறப் போவதில்லை.
எமது வரலாற்றை காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கிறோம். இல்லையேல் வருங்கால சந்ததிக்கு பெரும் துரோகம் இழைத்த கேடுகெட்ட கூட்டமாகவே பிற்காலத்தில் வாசிக்கப்படுவோம்.
கோடியில் புரலும் முஸ்லிம் முதலைகள் உருப்படியாக சமூகத்தின் தேவை என்ன என்பதை உணராமல் இப்தாரிலும் பள்ளி கட்டுவதிலும் மூழ்கி போய் கிடக்கிறது. இந்த சமூகத்துக்கு தேவையானது எது என்பதை உணராத செயல் படுத்துவது எப்படி என்பதை உணராத ஒரு தலமை இல்லா சமூகம் அழிந்தே போகும்.
உன் முன்னோர் வரலாறு கொண்டு இன்று நீ மறைக்கப்படுகிறாய். உன் வரலாறு கொண்டு நாளை உன் சந்ததி அடிமையாகும் , நாளைய வரலாற்றை கொண்டு எங்கு செல்லுமோ....
நாம் வரலாறு படைக்கா விட்டாலும் வரலாறு படைத்த முன்னோர் வரலாற்றை பாதுகாத்து நாம் வரலாறு படைக்க வேண்டியுள்ளது.
S.Sifraj (madinah)