சிங்கள இனவாத வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தோழமையினை ஜெனீவாவில் வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளை கண்டித்தும், அதனை அனைத்துலக சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் பொருட்டு ஜெனீவா- ஐ.நா மனித உரிமைச்சபையில் பக்க நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, நா.தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான அமைச்சர் மணிவண்ணன்,
தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே தமிழ் பேசும் முஸ்லீம்கள் சிங்கள இனவாதத்தினால் தாக்கப்படுகின்றனர்.
அதன் தொடர்சியாகவே தற்போதைய முஸ்லிம்கள் மீதான வன்முறை உள்ளது. குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்படாத நிலை, மேலதிக குற்றங்களை இழைப்பதற்கு தூண்டுகின்றது.
ஸ்ரீலங்கா அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டிய இடத்தில் இருக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.
Thanks : Tamilwin