அதன் பின்னர் பிற நாட்டினர் சிரியாவை கவனித்துக்கொள்வார்கள். நாங்கள் விரைவில் வெளியேறி விடுவோம். எங்கள் நாட்டுக்கு திரும்ப இருக்கிறோம்” என்றார்.
சிரியாவில் சுமார் 2000க்கும் மேற்பட்ட அமெரிக்கா ராணுவ வீர்ரகள் குர்தீஷ் மற்றும் அரபுப் படைகளுடன் இணைந்து ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிட்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் இந்தச் செயலை ஐ. நா. உட்பட உலக நாடுகள் பலவும் தொடர்ந்து பல ஆண்டுகளாக விமர்சித்து வந்தன. இந்த நிலையில் ஒபாமாவுக்குப் பிறகு அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளில் திருத்தம் செய்து வருகிறார்.
சிரிய உள்நாட்டுப் போர்
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் 6 ஆண்டுகளுக்கு மேலாக உள் நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா உதவி செய்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா உதவி வருகிறது.
கடந்த சில மாதங்களாக தீவிரம் அடைந்து வரும் சிரிய போரில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு கவுட்டாவின் பெரும் பகுதியை சிரிய அரசுப் படைகள் கைப்பற்றிவிட்டன. இந்தச் சண்டையில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
ஐ. நா. சார்பில் 30 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டும் கிளர்ச்சியாளர்கள், சிரிய அரசு என்று இரு தரப்பிலும் போர் நிறுத்தம் மீறப்பட்டது குறிப்பிடத்தக்கது.