Top News

நாளை காத்தான்குடியில் "முஸ்லிம் தேசியம்" எழுச்சி மாநாடு



இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டின் இறைமையை மீட்டெடுப்பதற்காக இரத்தம் சிந்தியவர்கள்.

போர்த்துக்கேயர்கள் தொடங்கி ஒல்லாந்தர் பிரித்தானியர்வரை அந்நிய ஆதிக்கத்தை தொடர்ச்சியாக ஒழிக்கப் போராடியவர்கள்.

இந்த நாட்டின் இறைமையின் பிரவிடாப் பாகத்தின் மீது பூரண உரிமை கொண்ட சமூகம் முஸ்லிம் சமூகம். அதனால்தான் முஸ்லிம் சமூகம் இலங்கையின் அனைத்து மூலைகளிலும் பரவி வாழ்கிறோம்.

இலங்கை முஸ்லிம்களுக்கு அன்றைய மன்னர்களால் அபயமளிக்கப்பட்ட பூமி. ஆதம் நபி முதலில் கால்பதித்ததால் இது முஸ்லிம்களுக்கு புனித பூமியும்கூட.

இன்று நமக்கு நேர்ந்தது என்ன?

இன்னும் அறிய வேண்டுமா?

சித்தி லெப்பை ஆய்வு மன்றத்தின் ஏற்பாட்டில் முஸ்லிம் தேசியம் எழுச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வாருங்கள்.

தமிழ்நாட்டு பேராசிரியர் செமுமு முகம்மதலி  அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்புரை ஆற்றவுள்ளார்கள்.

இடம்: காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபம்

காலம்: 31.03.2018 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு.

கிழக்கு மாகாண புத்திஜீவிகள் சமூக ஆர்வலர்கள் அனைவரையும் அணுகி தேசிய தலைமைத்துவசபையை நிறுவ அழைக்கும் உன்னத பணியில்
இணையுங்கள்.

உங்கள் தலைவிதியை நீங்களே மாற்ற முயலும் நீண்ட பயணத்தில் இது ஒரு காத்திரமான தொடக்கம்.
Previous Post Next Post