யாழ் மாவட்டத்தின் பல்சமய கலாசாரங்களை வெளிப்படுத்தி நிற்கும் ஆளுமைகள் மற்றும் வணக்கஸ்தலங்கள் எனும்; இரண்டு நூல்கள் யாழ் முஸ்லிம் இளைஞர் கழகத்தினால் ஒஸ்மானியாக் கல்லூரி மற்றும் ஹதீஜா பெண்கள் கல்லூரி ஆகியவற்றிற்கு கையளிக்கப்பட்டன.
யாழ்ப்பாணப் பெட்டகம் (நிழலுருக்கலைக்கூடம்) அமைப்பினால் கடந்த வருடம் வெளியிடப்பட்டிருந்த ஆளுமைகள் மற்றும் வணக்கஸ்தலங்கள் நூற்தொகுதிகள் யாழ் முஸ்லிம் இளைஞர் கழகத்தினால் கொள்வனவு செய்யப்பட்டு நூலகப் பயன்பாட்டிற்காக யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி அதிபரிடமும் மற்றும் யாழ் ஹதீஜா பெண்கள் கல்லூரி நூலகப் பொறுப்பாசிரியர்களிடமும் கடந்த 2018.02.28 ஆம் திகதி பாடசாலையில் வைத்து யாழ் முஸ்லிம் இளைஞர் கழகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பொருளாளர் செல்வன் சனூன் மொஹமட் சாக்கீர் அவர்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்டது. மேற்படி வணக்கஸ்தலங்கள் நூலில் யாழ்ப்பாணம் முஸ்லிம் பள்ளிவாயல்கள் குறித்தும் அறிமுகப்படுத்தல்கள் காணப்படுகின்றமை விசேட அம்சமாகும். மேற்படி நூல் பாடசாலை மாணவர்களுக்கும், யாழ் முஸ்லிம்கள் குறித்து ஆய்வு செய்பவர்களுக்கு முஸ்லிம்களின் அடையாளம் தொடர்பாக சான்றுப்படுத்துவதற்கும் பயனுடையதாக அமையும் என்பது தமது இளைஞர் கழகத்தின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையுமாகும் என பொருளாளர் செல்வன் சனூன் மொஹமட் சாக்கீர் அவர்கள் குறிப்பிட்டிருந்தமை விசேட அம்சமாகும்.