இலங்கையில் சிறுபான்மையின மக்கள் மீது முன்னெடுக்கப்படும் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். வன்முறையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று ஜெனிவா மனித உரிமைபேரவையில் அமெரிக்கா, பிரித்தானியா ஜெர்மனி, சுவிட்ஸர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்வேறு நாடுகள் கூட்டாக இணைந்து அறிவித்தன.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்று நடைபெற்ற இலங்கை ஜெனிவா பிரேரணையை எவ்வாறு அமுல்படுத்தியது என்பது குறித்தான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே உறுப்பு நாடுகள் இந்த விடயத்தை சுட்டிக்காட்டின.
2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டு பின்னர் 2017 ஆம் ஆண்டு இரண்டு வருட கால நீடிப்புக்குள்ளான பிரேரணையை இலங்கை அரசாங்கம் எவ்வாறு அமுல்படுத்துகின்றது என்பது குறித்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனின் அறிக்கை மீதான விவாதமே இவ்வாறு நடைபெற்றது.
முதலில் பிரித்தானியா பிரதிநிதி உரையாற்றுகையில்,
நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து எமது நிலைப்பாட்டை இலங்கைக்கு அறிவிக்கிறோம். ஐ.நா. பிரேரணையின் பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும். மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். காணாமல் போனோர் அலுவலகம் சாதகமாக இருக்கிறது. ஆனால், தாமதமான நிலைமையே எமக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது. சிறுபான்மை இன மக்கள் மீதான வன்முறையை நிறுத்த வேண்டும். வைராக்கிய பேச்சை நிறுத்த வேண்டும். அதிகார பரலாவக்கலை முன்னெடுத்து காணாமல் போனோர் மீதான உண்மையை அறிய வேண்டும் என்றார்.
பல்கேரியா பிரதிநிதி உரையாற்றுகையில்,
ஐரோப்பிய ஒன்றியம் சார்பான இந்த அறிக்கையை விடுக்கிறோம். இலங்கையை மனித உரிமைகள் மீதான அக்கரையை செலுத்த வேண்டும். சில காரணிகள் சாதகமாக இருக்கின்றன. ஆனால், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றார்.
ஜெர்மன் நாட்டின் பிரதிநிதி உரையாற்றுகையில்,
இலங்கையின் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. காணாமல் போனோர் ?அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். சிறுபான்மையினரின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.
சுவிஸர்லாந்து நாட்டின் பிரதிநிதி உரையாற்றுகையில்,
சிறுபானர்மையினருக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமம். வன்முறைகளை ஏற்படுத்தும் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் கொண்டுவரப்பட வேண்டும். ஜெனிவா பிரேரணைகளை பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும். சரணடைந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியல்களை வெ ளியிட வேண்டும்