ஞானசார தேரர் மீது இருந்த தடை நீக்கம்

NEWS


பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வெளிநாடு
செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

இன்று கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் நீதிபதி புத்திக ஸ்ரீ ராகல இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

இன்று  6 ஆம் திகதி முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஜப்பான் சுகுபா சம்போதி விகாரையில் இடம்பெறும் நிகழ்வொன்றில் கலந்துகொள்ளவென தெரிவித்து முன்வைத்திருந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு அறிவிக்குமாறு நீதிமன்ற பதிவாளருக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
6/grid1/Political
To Top