Top News

அரசியல்வாதிகளை தூற்றுவதை நிறுத்தி விட்டு சமூகத்திற்காக ஒற்றுமையுடன் பயணிப்போம் வாரீர்!



தஸ்மின் எம்.இம்தியாஸ்

மாவனல்லை கலவரம், புத்தளக் கலவரம், கம்பளை கலவரம் என்று வரலாறு நெடுகிலும் நாம்  இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ளோம், ஏன் விடுதலைப்புலிகளும் எமக்கு பல துரோககங்களை செய்தனர். இவற்றையெல்லாம் நாம் பார்க்கின்ற போது இது ஒரு சமூகத்தின் சதியாக இருந்துவிட முடியாது, இது சர்வேதச அரங்கில் திட்டமிடப்படும் சதியென எண்ணத்துாண்டுகிறது.

அப்படி துாண்டப்படும் சர்வதேச கொள்கைகளுக்கு இசைவாக இலங்கையில் ஒரு சில இனவாத அமைப்புகள் இயங்குகின்றன, உதாரணமாக பொதுபலசேனா, சிங்கள ராவய, சிங்ஹலே இவைகள் தனியாக இயங்குவதில்லை, இவைகள் இயக்கப்படுகின்றன,
உலக அரங்கில் முஸ்லிம் சமூகம் மீதான ஒடுக்குமுறைகளும் சுமத்தப்படும் பழிகளும் இலங்கையில் மாறுபட்டு காணப்படுகிறது, காரணம் இந்த நாட்டில் முஸ்லிம்களால் எந்தவொரு கலவரங்களும் உண்டாகவில்லை, ராஜ அரசில் இருந்து ஜனாதிபதி ஆட்சிவரை இந்த நாட்டிற்கு வரமானத்திலும், வளத்திலும், குணத்திலும் செயலலிலும் முஸ்லிம்கள் பல உதவிகளை செய்துள்ளனர் இதற்கு வரலாறு ஓர் சான்று.

தீவிரவாதிகளாகவும், அடிப்படைவாதிகளாகவும் உலக அரங்கில் பார்க்கப்படும் முஸ்லிம்கள் இலங்கையில் நல்ல குணமுள்ளவர்களாக பார்க்கப்படுகின்றனர், இவைகள் ஒரு சில நாடுகளுக்கு பிடிக்காமல் இருக்கிறது, இதற்காக இனக்கலவரங்களை துாண்டிவிடுகின்றனர், துாண்டியும் விட்டனர், கடந்த மஹிந்த ஆட்சியில் இப்படி நடந்தபோது மஹிந்த வேடிக்கை பார்த்தார், பின்னாளில் மக்கள் அவரை வேடிக்கை பார்த்தனர், ஆனால் நல்லாட்சியை உருவாக்கியவர்கள் முஸ்லிம்கள், நல்லாட்சி இப்படியான கலவரங்கள் வருகின்ற போது கைகட்டி பார்த்திருக்க மாட்டாது என்ற நம்பிக்கை முஸ்லிம்களுக்கு இருக்கிறது.
அவசரகால சட்டம், சமூகவலைத்தள முடக்கம், முக்கியஸ்தர்கள் கைது என வேறு நாடுகளால் செய்ய முடியாத காரியங்களை முஸ்லிம்களுக்காக செய்தது, இதற்கான காரணம் எமது முஸ்லிம் தலைமைகளும் முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களுமே, நாம் இன்று எமது தலைவர்களை துாற்றுவதில் எவ்வித பயனுமில்லை,

அமைச்சர் ரிசாத் பதியுதீன், அமைச்சர் ஹக்கீம், அமைச்சர் ஹலீம், அமைச்சர் கபீர் ஹாசிம், ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அதீத செயற்பாட்டில் நிலமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

வல்ல இறைவன் எம்மை பாதுகாத்துள்ளான், இன்று உடைக்கப்பட்ட பள்ளிவாசல்கள், எரிக்கப்பட்ட கடைகள், நசுக்கப்பட்ட வீடுகள் நம்மவர்களின் உதவியினால் மீளக் கட்டப்படுகிறது,
இனியும் சுய அரசியல் பேசாமல் நமது சமூகத்திற்காக இணைந்து செயலாற்ற வேண்டும், இப்படி பிரச்சினைகள் இனிவராது என்பதற்கு என்ன உத்தரவாதம் அதற்கு முன்னர் நாமும் நமது தலைவர்களும் இணைந்து பொறிமுறைகளை உருவாக்கி செயலாற்ற வேண்டும்.
ஒற்றுமையெனும் கயிற்றை பற்றிப்பிடிப்போம்.

Previous Post Next Post