காத்தான்குடியில் இருந்து கொழும்பு சாஹிறாக் கல்லூரிக்கு வரும்போது இவர் ஒரு சிறிய பையன். எனினும் காத்தான்குடியில் இருந்து முதன்முறையாக சவூதி அரேபியாவுக்குச் செல்கின்றபோது இவர் வலிமைமிக்க ஓர் இளைஞர்.
வர்த்தக அறிவும், மாறுபட்ட கோணத்தில் சிந்திக்கும் இயல்பும் இவருடன் கூடவே பிறந்த திறன்களாகும். பெஷன் தொடர்பில் எழுந்த ‘காய்ச்சலால்’ முதிர்ச்சியடைந்து சாதித்தவரான N.L.M. முபாறக், ஒரு புதுமையான மனிதர். NOLIMIT மற்றும் Glitz தோன்றியது இந்தப் புதுமையான மனிதரிடத்திலிருந்தே. இந்த வடிவமைப்பாளரிடமிருந்தே.
மிகவும் பரந்தளவிலான வாடிக்கையாளர் வலையமைப்பொன்றைக் கொண்டிருந்தபோதிலும், ஒருபோதும் இவர் பொது மக்கள் முன்னிலையில் தோன்றியதில்லை. முதன் முறையாக அந்தக் கொள்கையைத் தகர்த்து இவர் உங்களைச் சந்திக்க வந்துள்ளார்.
நீங்கள் இந்த நாட்டில் பரந்த பெஷன் வலையமைப்பை உருவாக்கிய வர்த்தகர்?
வர்த்தகர் என்று சொல்வதைவிட தொழில் முயற்சியாண்மையாளர் என்று அறிமுகப்படுத்துவதையே நான் விரும்புகின்றேன். ஏனெனில் வர்த்தக நோக்கங்களைக் கடந்த மிகச் சிறந்த நோக்கங்கள் NOLIMIT இற்குள்ளும் என்னுள்ளும் இருக்கின்றன.
NOLIMIT என்பது இன்று வளர்ந்து வருகின்ற வர்த்தகர்களுக்கு முன்மாதிரியான ஒன்றாகும். அவர்களுக்கு முன்மாதிரி ஒன்றை வழங்குகின்ற தொழில் முயற்சியாண்மையாளராகவும் தொழிலதிபராகவும் என்னை நான் காண்கின்றேன்.
NOLIMIT என்பது இன்று வளர்ந்து வருகின்ற வர்த்தகர்களுக்கு முன்மாதிரியான ஒன்றாகும். அவர்களுக்கு முன்மாதிரி ஒன்றை வழங்குகின்ற தொழில் முயற்சியாண்மையாளராகவும் தொழிலதிபராகவும் என்னை நான் காண்கின்றேன்.
நீங்கள் எவ்வாறு அப்படிக் கூறுவீர்கள்?
எனக்கு இருப்பது பெஷன் குறித்த ‘காய்ச்சல்’. இது என்னுடனேயே ஒன்றிப் பிறந்தது. இந்தக் காய்ச்சல் காரணமாக நான் பெஷன் பற்றி நிறையவே சிந்திக்கின்றேன். வர்த்தகக் கருத்தேற்புக்களை (Business Concepts) உருவாக்குகின்றேன். அதன் மூலம் தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்துகின்றேன். நான் இந்த நாட்டில் சில்லறை வணிகத் துறையை (Retail Industry) மாற்றியமைத்து அதற்குப் புதியதொரு வடிவத்தைக் கொடுத்தேன்.
நீங்கள் இந்நாட்டில் எந்தளவு எண்ணிக்கையான தொழில்வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளீர்கள்?
கடந்த 24 வருட காலத்தினுள் நாம் இந்த நாட்டின் சில்லறை வணிகத் துறையில் 10,000 இற்கும் அதிகமான தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளோம். சிலவேளை இதனைவிட அதிகமாகவும் இருக்கலாம். பாடசாலையை விட்டுவிலகிய இளைஞர்களை உள்வாங்கி, அவர்களுக்குச் சிறந்ததொரு பயிற்சியை வழங்கி, அவர்களின் நடையுடை பாவனை மற்றும் மனப்பாங்கு என்பவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம்.
அவ்வாறு உருவாகியவர்களுள் பலர் இன்று நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தருகின்ற விதத்தில் சர்வதேச ரீதியில் பணியாற்றுகின்றனர். NOLIMIT இல் பணியாற்றியதாகச் சொன்னவுடன் அவர்களுக்கு இன்று சர்வதேசத்தில் பாரிய வரவேற்புக் கிடைக்கின்றது.

உங்களது பெஷன் வலையமைப்பில் தொழில்வாய்ப்புக்கள் முஸ்லிம் இனத்தவர்களுக்கு மாத்திரமா?
இது சகல இனங்களையும் மதங்களையும் சேர்ந்தவர்கள் பணியாற்றுகின்ற ஓரிடம். நூற்றுக்கு, ஐம்பது – ஐம்பது வாய்ப்புக்கள் அவர்களுக்கும் உள்ளது. நான் தொழில்வாய்ப்புக்களை வழங்குவது இலங்கையர்களுக்கு. எமது வாடிக்கையாளர்களுள் பல்வேறுபட்ட வர்க்கத்தைச் சார்ந்தவர்களும் உள்ளனர். அதேபோன்றுதான் எமது பணியாட்தொகுதியினரும்.
உங்களது வர்த்தகத்தின் நோக்கம் என்ன?
எந்தவொரு வர்த்தகருக்கும் மேலிருந்து கீழ் வரை (top to bottom) குறிப்பான கவனக்குவிவொன்று இருக்க வேண்டும். அதனூடே வாடிக்கையாளர் மகிழ்ச்சியடைய வேண்டும். இறுதியில் மக்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். NOLIMIT இல் இருப்பது முற்றிலும் மகிழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டமைந்த இத்தகையதொரு குறிக்கோளே.
சில நிறுவனங்களில் வாடிக்கையாளர் மீது கோபத்துடன் இருப்பதைப்போல் பெண் விற்பனையாளர் (Sales Girl) பதவியிலுள்ள யுவதிகள் இருக்கின்றனர். இது சில்லறை வணிகத் துறையின் இயல்பா…
இல்லை. ஏதேனுமொன்றைக் கொள்வனவு செய்தாலும், செய்யாவிடினும் வாடிக்கையாளருக்கு மகிழ்ச்சியுடன் உதவுவதுதான் சில்லறை வணிகத் துறையின் ஒழுக்க நெறியாகும். NOLIMIT பணியாளர்களும் அவ்வாறுதான். எமது நிறுவனத்தில் உயர்மட்டத்திலிருந்து அடிமட்டம் வரையான அனைத்துப் பணியாட்தொகுதியினரும் இத்தகைய மகிழ்ச்சியுடன் வேலை செய்யும் உளக்கருத்துக்கு இயைபாக்கம் அடைந்தவர்களேயாவர். தனது உயரதிகாரி இருந்தாலும் சரி, இல்லாவிடினும் சரி அவர்கள் இதயசுத்தியுடன் பணியாற்றுவர். எமது முன்னேற்றமும் அதுதான்.
பணியாளர்களின் மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதென்பது இலகுவாக அமைந்ததா?
வாழ்க்கையின் பழக்கமாக அதனை மாற்றிக்கொண்டால் அது கடினமான ஒன்றல்ல. வாடிக்கையாளர் திருப்தியடைந்தால் மாத்திரமே அவர்கள் மீண்டும் எம்மிடம் வருவர். அவ்விதம் அவர்கள் மீண்டும் மீண்டும் வந்தால்தான் எமது நிறுவனம் தொடர்ந்து இயங்கும். அவ்வாறு தொடர்ந்து இயங்கினால் மாத்திரமே தமது தொழில் நீடிக்கும் என்ற யதார்த்தத்தைப் பணியாளர்கள் புரிந்து கொள்வதே முக்கியமாகும்.
சிறந்த மனப்பாங்கை உருவாக்கி பயிற்றுவிக்கப்பட்ட பணியாளர்கள் உங்கள் நிறுவனத்தைவிட்டு விலகுவதற்கு நீங்கள் இடமளிக்கின்றீர்களா?
எம்மிடம் உள்ளவர்களில் நூற்றுக்கு இருபத்தைந்து வீதமானோர் 25 வயதிற்குட்பட்ட இளைஞர் யுவதிகள். பத்துப் பதினைந்து வருடங்கள் தொடர்ச்சியாக எம்மிடமே பணியாற்ற வேண்டுமென்ற எந்தவொரு நிபந்தனையையும் நாம் விதிப்பதில்லை. ஒரு கதவு மூடப்படும்போது இன்னுமொரு கதவு திறக்கப்படுகின்றது. விலகிச்செல்கின்ற அளவுக்கு, நாம் புதியவர்களை ஆட்சேர்ப்புச் செய்து பயிற்றுவிக்கின்றோம். அது எமக்குப் பிரச்சினையல்ல.
உங்களுடைய முகாமைத்துவப் பாங்கு யாது?
அது ஏதேனும் செயற்பாடுகளுக்கு அமைவாக நிகழ்கின்ற ஒன்று. மேலிருந்து கீழ் வரை சகலருக்கும் வழங்கப்படுகின்ற கடமையொன்று உள்ளது. அவரவருக்கென அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த அதிகார வட்டத்தினுள் அவர்களுக்கான சுதந்திரமும் உள்ளது. சகலவற்றிலும் தலையிடுவதை விடுத்து குறித்த வட்டத்தினுள் தொழிற்படுவதே எனது பாங்கு.
உங்களுக்கும் பணியாட்தொகுதியினருக்குமிடையே நிலவுவது, கொடுக்கல் வாங்கல்கள் மாத்திரமா அல்லது அதனையும் தாண்டிய பிணைப்பொன்றா?
சிறந்த பணியாளர் ஒருவர் கிடைப்பதென்பது சிறந்ததொரு மனைவி கிடைப்பதற்குச் சமமானதாகும். பண்பற்ற பணியாளர் ஒருவருடன் வேலை செய்வதானது கொடூரமான மனைவியுடன் வாழ்வதற்குச் சமமானதாகும். நிறுவனத்தின் முன்னேற்றமானது பணியாட்தொகுதியினரின் கைகளிலேயே தங்கியுள்ளது. அதனால் அவர்களுடன் எனக்குள்ளது ஒரு பிணைப்பேயாகும்.
தீர்மானங்களை மேற்கொள்கின்ற போது நீங்கள் எவ்வாறு சிந்திக்கின்றீர்கள்?
அவை மிகத் துரிதமான தீர்மானங்களாகும். இன்று பார்த்து நாளை பார்த்து. இன்னும் கொஞ்சம் பார்த்து எடுக்கப்படுபவை அல்ல. வர்த்தக நடவடிக்கைகளில் அவ்வாறு இழுத்தடித்துக்கொண்டு இருக்க முடியாது.
நீங்கள் வாழ்க்கை குறித்து நிறைய திட்டமிடுபவரா?
இதுவரை திட்டங்கள் ஏதுமின்றியே நிறைய விடயங்கள் நடந்துள்ளன. எனினும் இறைவனின் திட்டத்திற்கு ஏற்பவே அவை நிகழ்ந்துள்ளன. நல்ல விடயங்களைச் செய்தால் முன்னோக்கிச் செல்வதற்கான பாதையொன்று உருவாகும்.
மனிதனின் முன்னேற்றத்தில் பெரிதும் தாக்கம் செலுத்துகின்ற காரணி என்ன?
முதலில் மற்றவர்களை முன்னேற்றுகின்ற முறை பற்றிச் சிந்தியுங்கள். சகல தொழில்வாண்மையாளர்களும் சாதிக்கவில்லை. சாதித்த அனைவரும் தொழில்வாண்மையாளர்களும் அல்லர். சிறந்த குறிக்கோளுடன் வேலைசெய்வதே முக்கியமானதாகும். அந்தக் குறிக்கோளினுள் மற்றவர்களை முன்னேற்றிவிடுகின்ற செயற்றிட்டம் ஒன்றும் இருக்க வேண்டும். அதேபோன்று வாழ்க்கைக்கு எவ்வித பெறுமானத்தையும் வழங்காத நபர்களிடமிருந்து விலகியிருப்பதும் முக்கியமாகும். சிறந்த மனிதர்களுடன் பழகுவதும், வாழ்க்கையில் நல்ல விடயங்களை இணைத்துக் கொள்வதும் முக்கியமானவையாகும்.

பெஷன் உலகத்தில் நிலவும் போட்டியானது உங்களுக்கு சவாலான ஒன்றா?
என்னைப் போன்றே ஏனையவர்களும் வாழ வேண்டும். ஆனால் சமமான வர்த்தக நடவடிக்கை ஒன்றில் மாற்றமொன்றை, புதுமையொன்றை வழங்குவதற்கு என்னால் முடியுமாயின் அந்த இடத்தில்தான் நான் வெற்றியாளனாகின்றேன். நான் அத்தகைய போட்டியை விரும்புகின்றேன். ஏனெனில், அப்போதுதான் எனக்கு மென்மேலும் புதிய விடயங்கள் குறித்துச் சிந்திப்பதற்கான சிறந்த தூண்டுதல் ஏற்படும். ஆடையணிகலன்களில் மட்டுமன்றி வீட்டு வாசல், சமையலறை, வரவேற்பறை, படுக்கையறை என சகல இடங்களும் எனக்கு பெஷன். வாழ்க்கையை வடிவமைக்கின்ற, அதனை வர்ணமயமாக்குகின்ற, எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன.
நீங்கள் முதலாவதாகச் செய்த தொழில் என்ன?
பாடசாலையில் இருந்து விலகியவுடனேயே லங்கா ஒபரோய் ஹோட்டலில் House Keeping பிரிவில் தொழிலொன்றை நானே தேடிக்கொண்டேன். நான் அங்கு விறாந்தையை சுத்தப்படுத்தினேன். அறைகளை ஒழுங்குபடுத்தி அவற்றைப் பெருக்கிச் சுத்தப்படுத்தினேன். பகலிலும் வேலை, இரவிலும் வேலை, எனது தொழிலை நான் மிகவும் மதித்தேன். இயன்றவரை சிறப்பாக வேலை செய்தேன். அது தொந்தரவு என்றோ தாழ்வானதென்றோ நான் ஒருபோதும் நினைக்கவில்லை. சவூதியில் இருந்த பத்து வருடங்களிலும் அவ்வாறுதான்.
இன்று அந்த கடந்தகாலம் ஞாபகத்திற்கு வருகின்றபோது என்ன நினைக்கின்றீர்கள்?
ஹோட்டல் அறையைப் பெருக்கிச் சுத்தப்படுத்திய ஒரு சிறிய பையனுக்கு இந்த நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கக்கூடிய பாரிய கம்பனியொன்றை உருவாக்க முடியுமாயின், இன்றைய சந்ததியினருக்கு எவ்வளவு விடயங்களைச் சாதிக்க முடியும். சரியான பாதையொன்றைத் தேர்ந்தெடுத்து, அதில் அர்ப்பணிப்புடன் பயணிப்பதே அவசியமாகும். தாய் தந்தை இல்லையெனில் ஏனைய முதியவர்களாவது அவ்வாறானவர்களுக்கு வழிகாட்டுங்கள். அதனையே நான் நினைக்கின்றேன்.
பத்து வருட காலம் நீங்கள் சவூதியில் என்ன செய்தீர்கள்?
அது “camp operation…” நிறுவனமொன்றாகும். நான் சுத்திகரிப்பாளர் ஒருவராகத் தொழிலை ஆரம்பித்தேன். சம்பளம் 950 ரூபா. எழுதுவினைஞர், மேற்பார்வையாளர், முகாமையாளர். என படிப்படியாக முன்னேறி, செயற்றிட்ட முகாமையாளர் என்ற உயர் பதவி வரை சென்றேன். சகல வழிநடத்தற் செயற்பாடுகளும் என்னிடமே ஒப்படைக்கப்பட்டன. 1500 பணியாட் தொகுதியினரை நிருவகித்தேன். நிருவாகம் மற்றும் இடர் முகாமைத்துவம் தொடர்பான சிறந்த அனுபவங்களை நான் அந்தத் தொழிலின்போதே பெற்றுக்கொண்டேன்.
அத்தகைய சிறந்த தொழிலை விட்டுவிட்டு நீங்கள் ஏன் இலங்கைக்கு வந்தீர்கள்?
எனக்கே உரிய ஒன்றைச் செய்வதற்கு. சிலவேளை எனக்குள்ளேயே தொந்தரவு தருகின்ற பெஷன் பற்றிய ஆர்வத்தின் தூண்டுதலாகவும் அது இருக்கலாம். நான் இலங்கைக்கு வந்து எனது தந்தை முன்னர் தொழில் புரிந்த பதுளையில் துணிக்கடை ஒன்றை ஆரம்பித்தேன். தந்தைக்கு மட்டக்களப்பில் துணிக்கடை ஒன்று இருந்தமையால் எனக்கு இதனைச் செய்வதற்குத் தோன்றியது. எனினும் ஆறு வருடங்களின் பின்னர் நான் அந்த வியாபாரத்தை நிறுத்திவிட்டேன்.
உங்களுக்கு அதிஷ்டத்தைக் கொண்டுவந்தது தெஹிவளை NOLIMITகாட்சியறைதானே?
‘‘French Corner' எனது முதல் காட்சியறை. பதுளையில் இருந்து வந்து எனது தங்கை, மைத்துனர் ஆகியோருடன் இணைந்து அந்தப் பெயரில் புதியதொரு வியாபாரத்தை ஆரம்பித்தேன். ஆண் - பெண் - சிறுவர் என சகலருக்கும் ஏதாவதொரு பெஷன் வகையறாக்கள் அதில் இருந்தன. 1992 இல் இருந்து 2005 வரை வியாபாரமானது முன்னேற்றகரமானதாக இருந்தது. அக்காலப்பகுதியில் சில்லறை வணிகத் துறையில் பெஷன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தியது நாமே.
அப்படியாயின் French Corner - NOLIMIT ஆனது எவ்வாறு?
தங்கையும் மைத்துனரும் வியாபாரத்தை என்னிடம் ஒப்படைத்து அவர்களுக்குரிய பணத்தைப் பெற்றுக்கொண்டு விலகிச் சென்றனர். நான் புதிதாக ஆரம்பிப்பதற்கான பெயர் குறித்துச் சிந்தித்தேன். ‘எல்லையற்றது…’ என்ற அர்த்தத்தைக் கொண்டதும் எனது பெயரின் முதலெழுத்துக்களைக் கொண்டதுமான NOLIMIT என்ற பெயரைச் சூட்டினேன்.
NOLIMIT என்பதனுள் உங்களுடைய பெயர் எங்குள்ளது?
NLM என்ற சிவப்பு நிறத்திலான மூன்று எழுத்துக்கள் குறிப்பது ‘நூஹ் லெப்பை முஹம்மட்’ என்ற எனது தந்தையின் குடும்பப் பெயர். எனக்கு எப்பொழுதும் பெயர் உருவாக்குகின்றபோது பெஷனுக்கமைய சிந்திக்கின்ற ஒரு பழக்கம் உள்ளது. கஷ்டப்பட்டு உருவாக்கிய பெயரைப் போலவே, ஒவ்வோர் ஆண்டும் நான் புதிதான ஓரிடத்தை உருவாக்கினேன். எவ்வாறெனில், முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ “கம் உதாவ”யை உருவாக்கியதைப் போன்று.
அதிகளவான காட்சியறைகளைக் கொண்ட வலையமைப்பொன்றை உருவாக்கும் கனவு உங்களுக்கு உண்டா?
சனத்தொகை மற்றும் கேள்வி என்பவற்றுக்கமையவே நாம் காட்சியறைகளைத் திறக்கின்றோம். கடன் பெற்று புதிய வியாபாரத்தைத் தொடங்குகின்ற பழக்கம் என்னிடம் இல்லை. பணம் இருந்தால் மாத்திரமே புதிய காட்சியறைகளைத் திறப்போம்.
இந்த நாட்டில் ‘செல்வந்த வர்த்தகர்களுக்குக் கைகொடுக்கவென’ வேண்டியளவு வங்கிகள் உள்ளனவே?
நான் எவரிடமும் கடன்கேட்டுச் செல்வதில்லை. ஒதுக்கீடு கேட்கின்ற அரசியல்வாதிகளின் பின்னால் செல்வதுமில்லை. அவைதான் எனது வாழ்க்கையின் பெறுமானங்கள்.
இந்த வியாபாரத்தை எவ்வளவு மூலதனத்துடன் ஆரம்பித்தீர்கள்?
பதுளையில் ஆரம்பித்தது இரண்டரை இலட்சங்களுடன். தெஹிவளை French Corner ஆரம்பித்தது பத்து இலட்சங்களுடன். அப்போது சகல வகையறாக்களும் கொஞ்சம் கொஞ்சம் இருந்தன. விற்பனைக்கேற்பவே நான் கொள்முதல் செய்தேன்.
ஆரம்பகாலத்தில் நாளொன்றுக்கு எத்தனை மணித்தியாலங்கள் வேலை செய்தீர்கள்?
சில நாட்களில் 12 – 14 மணித்தியாலங்கள் வேலை செய்தேன். கொள்முதல் செய்ததும் நான்தான். விற்பனை செய்ததும் நான்தான். கணக்கு வழக்குகளைப் பார்த்ததும் நானே. மொத்தத்தில் சகல வேலைகளையும் நானே செய்தேன்.
வாழ்க்கையில் பெற்ற மிகப் பெரிய வெற்றி எது?
சிறந்த பிள்ளைகள் ஐவரைப் பெற்றமை. மூத்த மகன் ஹாபிஸ். அவர் இந்த வர்த்தகத்தின் பணிப்பாளர்களுள் ஒருவர். இரண்டாவது மகன் தீதாத். அவரும் பணிப்பாளர்களுள் ஒருவர். இவர்கள் இருவரும் சிறப்பாகப் பணியாற்றுகின்றனர். மூன்றாவதும் நான்காவதுமான புதல்வர்கள் மற்றும் இளைய மகள் ஆகியோர் உயர் கல்வியைத் தொடர்கின்றனர். எனது பிள்ளைகள் அனைவரும் சிறந்த முறையில் வளர்க்கப்பட்டுள்ளனர். உண்மையில் நான் வியாபார விடயங்களில் பெரும்பாலான காலத்தைச் செலவிட்ட போது, எனது மனைவி மக்கியா, பிள்ளைகளைச் சிறப்பாக வளர்த்தெடுத்தார். அவர் சிறந்ததொரு தாய் மட்டுமல்ல, சிறந்த முறையில் ஊக்குவிக்கக்கூடிய மனைவியும்தான்.
அப்படியெனில் NOLIMIT குடும்ப வர்த்தகம் ஒன்று?
ஆம். நான், மனைவி மற்றும் பிள்ளைகள் என்போரைக் கொண்ட குடும்ப வணிகம். அவர்கள் வணிகம் பற்றி சிறந்த முறையில் சிந்திக்கின்றனர்.
வாழ்க்கையில் பெற்ற தோல்விகள் எவை?
பதுளையில் இருந்த போது நான் விருந்தகம் ஒன்று நடத்தினேன். அதில் நட்டம் ஏற்பட்டு அதனை மூடிவிட்டேன். அதன் பிறகு ஏஜென்சி ஒன்று தொடங்கி அதுவும் வெற்றியளிக்கவில்லை. சரிவராது என எனக்கு விளங்கினால் அந்த வியாபாரத்தை நான் கைவிட்டு விடுவேன். அதனை நான் தோல்வியாக நினைப்பதில்லை. அதிலிருந்து விடுபடுவது அதனை விட நிம்மதியானதாகும்.
நீங்கள் சவால்களை எதிர்கொள்ள விரும்பும் ஒருவரா?
அனேகமானோர் வேண்டாமென்று கூறியபோதும் கல்கிஸ்ஸயிலுள்ள மயானத்திற்கு எதிரே நான் பெரியதொரு Glitz காட்சியறையைத் திறந்தேன். மயானம் பாழடைந்துள்ளது என்பதற்காக எனது வியாபாரமும் பாழடைந்ததா? இல்லை. அத்தகைய போலியான நம்பிக்கைகள் என்னிடமில்லை. கவர்ச்சிகரமாக முன்வைக்க முடியுமாயின் மயானத்திற்குள்ளே காட்சியறையைத் திறந்தாலும் வாடிக்கையாளர்கள் நாடி வருவர்.
உங்களுடைய பிரதேசம் கொழும்பா?
இல்லை, காத்தான்குடி. பன்னிரண்டு வயதுவரை நான் அங்கேயே கல்விகற்றேன். அதன் பின்னர் சாதாரணதரம் வரை கொழும்பு சாஹிறாக் கல்லூரியில் கற்றேன். பாடசாலை விடுதியில் தங்கியிருந்தேன். விடுமுறை காலங்களில்தான் வீட்டுக்குச் சென்றேன்.

காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு வந்து தனியாக சகலதையும் தாங்கிக்கொள்ளும் பிள்ளையாக இருப்பதற்கு உங்களால் முடிந்ததா?
எந்தவொரு நிலையிலும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு எனக்குக் கற்றுக்கொடுத்தவர் எனது தாய். சிறு வயதிலும் நான் மனவுறுதி மிக்க ஒரு பிள்ளை. தாய், தந்தையிடமிருந்து பெற்றுக்கொண்ட சிறந்த குணநலன்களும் அந்த மனவுறுதிக்கு மெருகூட்டின. மனிதர்களை மதிப்பதற்கு, தவறின் போது மன்னிப்பதற்கு, நேர்மையாக வாழ்வதற்கு, அடுத்தவர்களைத் தொந்தரவு செய்யாதிருப்பதற்கு, தீயவர்களிடமிருந்து விலகியிருப்பதற்கு, நல்லவர்களுடன் உறவாடுவதற்கு, வீட்டுக்குச் சென்ற எல்லா நேரங்களிலும் தாயும், தந்தையும் எனக்குச் சொல்லிக்கொடுத்தனர். அடிக்கடி நினைவூட்டினர்.
சிக்கனமாக வாழ்வதற்கு அந்தப் பிள்ளைப் பருவத்தில் உங்களுக்குப் பழக்கம் இருந்ததா?
தந்தைக்கு மட்டக்களப்பில் துணிக்கடை ஒன்று இருந்தது. மீண்டும் செல்கின்ற போது எனது செலவுகளுக்குப் போதியளவு பணம் கிடைத்தது. அதனால் சொல்லுமளவுக்கு பணப் பற்றாக்குறை இருக்கவில்லை. குடும்பத்தில் பிள்ளைகள் எட்டுப் பேர். அவர்கள் அனைவரையும் விடுதியில் தங்கவைத்தே தந்தை கற்பித்திருந்தார்.
பிள்ளை என்ற வகையில் உங்களுக்கு இருந்த கனவு - குறிக்கோள் என்ன?
அவ்வாறு பெரியளவிலான கனவுகள் எவையும் இருக்கவில்லை. ஆனால், வீட்டில் இருந்தபோதும் விடுமுறைக்குச் சென்று வருகின்றபோதும் நான் எப்பொழுதும் தந்தையிடம் கேட்டது ‘எனக்குக் கொண்டுவந்த புதிய விடயங்கள்’ எவை என்றே. அந்தக் காலத்திலும் நான் அழகாக ஆடையணிந்தேன். புதிய விடயங்கள் பற்றி அதிக ஆர்வமும் ஆசையும் இருந்தது. அதனால் குறைந்தது புதிய கைக்கடிகாரம் - செருப்பு போன்றவைசரி எனக்குக் கிடைத்தன.
ஏதேனும் சுட்டித்தனம் புரிந்து அடிவாங்கிய அனுபவம் உண்டா?
நான் றகர் விளையாடினேன். கிரிக்கட் விளையாடினேன். மெய்வல்லுனர் விளையாட்டுக்களில் ஈடுபட்டேன். நான் றகர் விளையாடிய அந்த வருடத்தில்தான் சாஹிறாக் கல்லூரி முதன்முறையாக புனித தோமஸ் கல்லூரியைத் தோற்கடித்து வெற்றியீட்டியது. சிறந்த விளையாட்டு வீரரிடத்தில் இருக்க வேண்டிய ஒழுக்க விழுமியங்கள் என்னிடத்தில் இருந்தன. அதனால் சண்டை சச்சரவுகளுக்கு நான் போனதுமில்லை. அடிவாங்கியதுமில்லை.

சாதாரணதரப் பரீட்சையானது உங்களது வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் தீர்மானித்தது எனக் கூறினால்?
நான் பரீட்சையில் சிறப்பாகச் சித்தியடையவில்லை. சிறந்த தொழில்கள் எனக்குக் கிடைக்காதென்பதை நான் புரிந்துகொண்டேன். நான் முடிவெடுத்தேன். ஹோட்டல் தொழிலுக்குச் சென்றேன். இல்லாமற்போன ஒன்றுக்காகக் கவலைப்படவேண்டிய தேவை எனக்கில்லை. இருக்கின்ற இடத்திலிருந்து ஆரம்பிக்கின்ற முறைதான் எனக்கு முக்கியம்.

உங்களுடைய முயற்சிமிக்க வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்டு தொலைதூரத்திலுள்ள கிராமத்தின் இளைஞர் யுவதிகள் இந்த நேர்காணலின் பின்னர் NOLIMIT மூலம் வாழ்க்கையை ஆரம்பிக்க எண்ணினால் உதவி செய்வீர்களா?
ஒவ்வொரு மாதமும் நாம் ஆட்சேர்ப்புச் செய்கின்றோம். தூரப் பிரதேசங்களில் இருந்து வருகின்றவர்களுக்குப் பாதுகாப்பான தங்குமிடங்களையும் உணவுகளையும் வழங்குகின்றோம். கொழும்புக்கு வந்தாலும் தவறான வாழ்க்கையொன்றினுள் விழாமல் இருப்பதற்காகவே நாம் அவ்வாறான பாதுகாப்பை வழங்குகின்றோம். மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பதவியுயர்வுகளைப் பெற்று வாழ்க்கையை வெற்றிகொள்வதற்கான சிறந்த வழியொன்று அவர்களுக்கு உள்ளது. அதற்கு உற்சாகம், அர்ப்பணிப்பு மற்றும் முயற்சி என்பவை மாத்திரமே அவர்களுக்குத் தேவை.
நீங்கள் வாழ்க்கையை வாழ்வது எவ்வாறு?
மனிதன் என்ற அடிப்படையில் நான் சிறப்புடன் வாழ்கின்றேன். உலகம் பூராகவும் செல்கின்றேன். வைத்தியசாலைகளில் நலன்புரிச் செயற்பாடுகள், தலதா பெரஹர அனுசரணை, சிறுவர் மேம்பாட்டுச் செயற்பாடுகள் போன்ற சகல சமயத்தவர்களும் இனத்தவர்களும் மகிழ்ச்சியடைகின்ற வகையில் ஒரு நிறுவனம் என்ற வகையில் எமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம். அது எனக்கும் மகிழ்ச்சியளிக்கின்றது.
உங்களுக்கு இயற்கையை இரசிப்பதற்கு நேரம் இருக்கின்றதா?
எனக்கு சீதுவையில் பண்ணை ஒன்று உள்ளது. அங்கு நான் நீண்ட செவிகளையுடைய ஆடுகளையும் ‘அரொவானா’ (Arowanas) வகையைச் சேர்ந்த மீன்களையும் வளர்க்கின்றேன். நான் உயிரினங்களை நேசிப்பவன். அவற்றைப் போஷித்து அவை வளர்கின்ற விதத்தைப் பார்த்து ரசித்து சந்தோஷமடைகின்றேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் அங்கு செல்வேன். பெஷனை நேசிப்பது போலவே செடிகொடிகளையும், உயிரினங்களையும் நான் நேசிக்கின்றேன்.

ஆடையொன்றை விற்றவுடன் நீங்கள் மகிழ்ச்சியடைவது அதன் இலாபத்தை நினைத்தா?
இல்லை. எனது காட்சியறையின் ஆடைகளை இந்த நாட்டிலுள்ள அனைவரும் அணிவதைப் பார்க்கவே நான் விரும்புகின்றேன். வெளிநாடொன்றில் ஒருவர் எனது காட்சியறை ஆடையை அணிந்து செல்வதை நான் கண்டேன். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.
புதிய யோசனைகள் (Ideas) பற்றிய எண்ணங்கள் உங்களை வதைக்கின்றதா?

நான் அடிக்கடி புதியவற்றைத் தேடுகின்றேன். பார்க்கின்றேன். சிந்திக்கின்றேன். தருவிக்கின்றேன். என்னைப்போலவேதான் எனது குழுவினரும். அவர்களது புதிய எண்ணங்களும் கருத்துக்களும் இந்த நிறுவனத்தினுள் செயல் வடிவம் பெறுகின்றன.
முழு நாட்டிற்கும் பெஷனை வழங்கிய நீங்கள், பெஷனாக இல்லையே?
நான் போதியளவு பெஷனாக இருந்த ஒருவன். அவ்வாறு உடுத்திய பெறுமதிமிக்க கழுத்துப்பட்டி, மேலங்கி, - சேர்ட் ,- காற்சட்டை – சப்பாத்து என்பன வேண்டியளவுக்கு இருந்தன. கடந்த நாட்களில் சுமார் 5000 அளவிலான எனது பெஷன் புகைப்படங்களை நான் அழித்துவிட்டேன். எட்டு வருடங்களாக நான் அணிவது எனது இந்த எளிமையான உடையையே. இந்த ஆடையில் அதிகளவான ஒழுக்கம் இருக்கின்றது. நான் தற்பொழுது விழாக்களில் கலந்து கொள்வதும் இந்த ஆடையுடன்தான். இதுதான் எனது அடையாளம்.
இலகுவானதெனக் கருதியா இந்த ஆடைக்கு மாறினீர்கள்?
இப்போதும் நான் நினைத்த மாத்திரத்தில் பேரூந்தில் செல்கின்றேன். நினைத்த மாத்திரத்தில் முச்சக்கர வண்டியிலும் செல்கின்றேன். எவரும் என்னை அடையாளம் காண்பதில்லை. அது எனக்கு மிகவும் சௌகரியமாக உள்ளது.
இப்போதும் நான் நினைத்த மாத்திரத்தில் பேரூந்தில் செல்கின்றேன். நினைத்த மாத்திரத்தில் முச்சக்கர வண்டியிலும் செல்கின்றேன். எவரும் என்னை அடையாளம் காண்பதில்லை. அது எனக்கு மிகவும் சௌகரியமாக உள்ளது.
உங்களது வாழ்க்கையில் தாங்க முடியாத கஷ்டம் ஏற்பட்ட காலப்பகுதி நினைவுள்ளதா?
இறைவன் எமக்குக் கஷ்டங்களைத் தருவது எம்மைச் சோதித்துப் பார்ப்பதற்காகவே. நாம் அவற்றுக்கு முகங்கொடுக்க வேண்டும். எனது பாணந்துறைக் காட்சியறை எரிந்து சாம்பலானது. சுமார் 300 மில்லியன் இழப்பு ஏற்பட்டது. நான் கவலைப்படுவதால் பயனுள்ளதா? இறைவன் கொடுத்தான். அவனே எடுத்துக்கொண்டான். ஆடையின்றி இந்த உலகத்திற்கு வந்த நான் நிறையவே சம்பாதித்தேன். சில நேரங்களில் அவற்றில் கொஞ்சம் குறைந்தது. அதனால், ஐயோ! எனக்குப் பிரச்சினை அதிகம் என கவலைப்படுவது எதற்கு? அதுதான் வாழ்க்கையின் நியதி. எந்தவொரு கஷ்டகாலத்திலும் நடுநிலையாக இருப்பதுதான் முக்கியம்.
NOLIMIT மற்றும் Glitz என்பன இந்த நாட்டில் இன்னும் எத்தனை வருடங்களுக்கு இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?

அதனைத் தீர்மானிப்பது வாடிக்கையாளர்களே. நாம் அவர்களுக்கு பெஷன் பற்றி வழங்குகின்ற ஒரு முற்பகர்வு, வரவேற்பு, பணத்திற்கான பெறுமானம் மற்றும் கவனக்குவிவு ஆகியன தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பவர்கள் வாடிக்கையாளர்களே. எனது பணி கவனக்குவிவைச் (focus) செலுத்துவதே. எனக்கு முதலாவதும், இரண்டாவதும், மூன்றாவதும் முக்கியமானது கவனக்குவிவுதான்.
தந்தையிடமிருந்து புதல்வர்களுக்குச் செல்கின்ற வர்த்தகத்தினுள் அத்தகைய சிறந்த குணநலன்கள் அனைத்தும் பாதுகாக்கப்படுமா?
அதற்காக சரியான நபர்களை, சரியான முறையில் பழக்கப்படுத்திப் பயிற்றுவிப்பது எனது கடமை. Boss என்று ஒருபுறமாக ஒதுங்கியிருக்க என்னால் முடியாது. சிறந்த மனப்பாங்குகளுடன் முன்னோக்கி வருகின்ற அடுத்த சந்ததியொன்று எனக்குத் தென்படுகின்றது என்பதைச் சொல்வதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.

நீங்கள் சமயத்தைச் சிறப்பாகப் பின்பற்றி வாழ்பவரா?
ஆம். அவ்வாறு இல்லையெனில் மறுவுலகில் நான் இறைவன் முன்னிலையில் பதில் சொல்ல வேண்டி ஏற்படும். அதனால் வியாபாரம் செய்கின்ற போதும் நாம் பின்பற்ற வேண்டிய சட்டதிட்டங்கள் இருக்கின்றன. நாம் சம்பாதிக்கின்ற சொத்துக்களில் இருந்து நூற்றுக்கு இரண்டரை வீதம் இந்த சமூகத்திற்கு வழங்க வேண்டும். அவ்வாறு செய்வதனால்தான் எமக்கு மீண்டும் அவை கிடைக்கின்றன.

மீண்டும் பெஷனாக ஆடை அணி வதற்கு நினைத்துப் பார்ப்பதில் லையா?
ஒவ்வொரு நாடுகளினதும் ஷொப்பிங் மோல்களுக்குச் சென்று ஆடைகளைத் தொட்டுப் பார்க்க இன்னும் எனக்கு ஆசைதான். ஆனாலும், அவ்வாறு அழகாக அணிந்து இரசித்த வாழ்க்கைக்கு நான் விடை கொடுத்துவிட்டேன்.
தற்போது உங்களுடைய வயது என்ன?
62. உடல் முதுமையடைந்தாலும் பெஷன் பற்றிய எனது எண்ணங்கள் முதுமை யடையவில்லை. அதனால் வயது எனக்கொரு பிரச்சினையல்ல. மென்மேலும் வேலை செய்யவே நான் விரும்புகின்றேன்.
உங்களுக்குள் இருந்த விளையாட்டு வீரன் எங்கே?
சகல விளையாட்டுக்களிலும் ஈடுபட்ட போதிலும் நீச்சலில் ஈடுபட முடியாமற் போய்விட்டது. நான் தற்போதுதான் நீச்சல் கற்றுக்கொண்டிருக்கின்றேன். 62 வயதல்ல, இன்னும் முதுமையடைந்தாலும் ஏதாவதொன்றைக் கற்றுக்கொள்வதற்கே நான் விரும்புகின்றேன். அதாவது என்னுள் அந்த விளையாட்டு வீரன் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றான்.
சொல்லுமளவுக்கு உயரமோ பருமனோ இல்லாத ஒருவர். என்றாலும் நீங்கள் உன்னதமான ஒரு பாத்திரம். முதன் முறையாகத்தானே ஊடகம் ஒன்றில் தோன்றியுள்ளீர்கள்?
ஆம். இந்த 25 வருட காலத்திற்கும் எனது புகைப்படம் ஒன்றேனும் பத்திரிகையில் பிரசுர மாகியிருக்கவில்லை. அவ்விதம் பிரசுரமாவது நான் விரும்பாத ஒன்று. எனினும் நீங்களும் விடவில்லையே. அதனால் முதன் முறையாக நான் எனது வாழ்க்கை பற்றி ஊடகமொன்றில் கதைத்திருக்கின்றேன். அதிலிருந்து யாரேனும் ஏதேனுமொன்றைப் பெற்றுக்கொள்ள முடியு மாக இருந்தால் அதுவே போதுமானது.