திகனவுக்கு விரைந்தது STF; தேவையேற்பட்டால் ராணுவத்தை களமிறக்க நடவடிக்கை

NEWS


திகன பிரதேசத்திற்கு பொலிஸ் விஷேட அதிரடிப்படை பாதுகாப்பிற்காக அழைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் முஜீபுர் ரஹ்மான் மற்றும் எஸ் எம் மரிக்கார் ஆகியோர் குறிப்பிட்டனர்.

தற்போது திகன பிரதேசத்தின் அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள பதற்றம் தொடர்பில் முன்னெடுக்கபட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் வினவிய போதே அவர்கள்  குறிப்பிட்டனர்.

சற்றுமுன்னர் பொலிஸ் மா அதிபர் விஷேட அதிரடிப்படை  பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோருடன் இருவரும் கதைத்ததாக கூறிய அவர் தேவையேற்பட்டால் ராணுவத்தை களமிறக்க நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார். (MN)


6/grid1/Political
To Top