மே 01 ஆம் திகதி எரிபொருள், சமையல் எரிவாயு விலை உயரும்!

NEWS
0
Image result for பந்துல குணவர்தன
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரம் மே மாதம் 01 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்புக்கான சூத்திரமொன்றை அரசாங்கம் அறிமுகம் செய்யவதற்கு பணிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சூத்திரத்தின்படி பெற்றோல் மற்றும் சமையல் எரிவாயு என்பவற்றின் விலை உயர முடியும் எனவும் கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்டுள்ள 3 வருட உடன்படிக்கையின் படி இலங்கைக்கு மூன்றாவது கட்ட உதவி எதிர்வரும் ஜூன் மாதம் கிடைக்கப் பெறவுள்ளது.  இந்த கடன் தொகை கிடைக்கப் பெறுவதற்கு முன்னர் உடன்படிக்கையில் செய்து கொள்ளப்பட்ட அம்சங்களை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டியுள்ளது.
இதன் ஓர் அங்கமாகவே, எரிபொருளுக்கான சூத்திரம் அறிமுகம் செய்யப்படுகின்றது. புதிதாக வரிகள் அறிமுகம் செய்யப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள உலக தொழிலாளர் தினத்தில் மக்களை அறிவுறுத்தவுள்ளோம் எனவும் பந்துல எம்.பி. மேலும் அறிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top