Top News

மேமா/ பிலி/மீலாத் முஸ்லிம் வித்தியாலயம் .தெஹிவளை.- மாணவர்களை பாராட்டும் வைபவம்.










க.பொ.த சாதரணதர பரீட்சையில் 100 வீத சித்தியினைப் பெற்ற மாணவர்களை பாராட்டும் வைபவம்.


கடந்த 2017 ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையில் மேமா பிலி மீலாத்  முஸ்லிம்  வித்தியாலய மாணவர்கள் சகல பாடங்களிலும் நூறு வீத சித்தியினைப் பெற்று தங்களுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர். 

இவர்களில் M.R.M.  முஸர்ரப் என்ற மாணவர் பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக ஒன்பது பாடங்களிலும் A தரச்சித்தியினபை் பெற்று சிறப்பான சித்தியினை அடைந்துள்ளார்.

இவர்களின் இம் முயற்சினைப் பெரிதும் மெச்சிய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் இம்மாணவர்களை பாராட்டுமுகமாக கடந்த 09.04.2018  அன்று பாராட்டு வபைவம் ஒன்றி்னை வித்தியாலய முதல்வர்  ஜனாப் M.S.M.சுஹார் அவர்களின் தலைமயைில் ஏற்பாடு செய்திருந்தனர்.

இவ்வைபவத்திற்கு பிரதம அதிதியாக பிலியந்தலை வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி.S.குணசேகர அவர்கள் கலந்து சிறப்பித்தார் சிறப்பு விருந்தினராக பிலியந்தலை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.S.பிரியதர்ஷினி அவர்கள் கலந்து கொண்டு பெருமை சேர்த்தார். 

இவர்களோடு பாடசாலையின் நலன் விரும்பிகள் உதவி வழங்கும் தனவந்தர்கள். கல்வி சமுகத்தினர். பெற்றேர்கள் என பல தரப்பினரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

விழாவில் பல்வேறுபட்ட கலை நிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டதோடு சித்தியடைந்த மாணவர்களுக்கு அவர்களுடைய சித்தியினைப் பாராட்டுமுகமாக நினைவுப் படிகங்களும் பலவிதமான அன்பளிப்புகளும் வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர். விழாவில் வித்தியாலய முதல்வர் மற்றும் பிரதம அதிதி மற்றும் சிறப்பு விருந்தினர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். ஆசிரியை திருமதி.S.M.கமால்தீன் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.


TM.imthiyas
Addalaichenai 

Post a Comment

Previous Post Next Post