ஜெம்ஸித் அஸீஸ்
பேருவைளை, ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்துக்கு 2018ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கான நேர்முக மற்றும் எழுத்துப் பரீட்சைகள் எதிர்வரும் 17ஆம் 18ஆம் 19ஆம் திகதிகளில் காலை எட்டு மணி முதல் ஜாமிஆ நளீமிய்யா வளாகத்தில் நடைபெறவுள்ளன. எழுத்துப் பரீட்சையில் மாணவரின் மொழித் திறன், பொது அறிவு, விவேகம் என்பன பரீட்சிக்கப்படும்.
நேர்முக மற்றும் எழுத்துப் பரீட்சைகள் வடக்கு, வட மத்திய, வட மேல் மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 17.04.2018 ஆம் திகதி செவ்வாய்க் கிழமையும் மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 18.04.2018 ஆம் திகதி புதன் கிழமையும்
தெற்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 19.04.2018ஆம் திகதி வியாழக் கிழமையும் நடைபெறவுள்ளதாகவும் அது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் 0342276338, 0776504765, 0773573815 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி தெரிவித்துள்ளார்.
Post a Comment