Top News

ரோஹிங்கிய படுகொலையில் ஈடுபட்ட 7 மியன்மார் இராணுவத்தினருக்கு 10 வருட சிறை!



7 மியன்மார் இராணுவ வீரர்களுக்கு ‘தூர பிரதேசத்தில் கடின உழைப்புடன் 10 வருட சிறைத்தண்டனை’ வழங்கப்பட்டுள்ளது.
வடமேற்கு ராக்கெய்ன் மாநிலத்தில் 10 ரஹோங்கிய முஸ்லிம்களை கடந்த செப்டம்பர் மாதம் படுகொலை செய்த குற்றச்சாட்டில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
“கொலைக்கு பங்களிப்பு செய்தமை மற்றும் ஈடுப்பட்டமைக்காக அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது” என இராணுவ தலைமை கட்டளை அதிகாரி மின் ஆங் ஹலாய்ங்கின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளதாக ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
தண்டனை வழங்கப்பட்டவர்களுள் 4 இராணுவ அதிகாரிகள் மற்றும் 3 இராணுவ வீரர்கள் அடங்குகின்றனர்.
இவர்களுள் 4 அதிகாரிகள் இராணுவத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டும், ஏனைய 3 இராணுவ வீரர்களும் இராணுவத்திலிருந்து நிரந்தரமாக பதவி நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த படுகொலையுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான சட்ட நடைமுறைகள் விசாரணை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மியன்மாரில் ராக்கெய்ன் மாநிலத்தில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் இராணுவ ஆதரவுடன் கூடிய வன்முறைகளால் சுமார் 700,000 பேர் தெற்கு பங்களாதேஷ் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ள அதேவேளை, இந்த வன்முறைகள் பாடப்புத்தக உதாரணம் (Textbook Example) என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post