அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன் வீட்டுத் தொகுதியும் அமைந்துள்ள “டிரம்ப் டவர்” 50 ஆவது தொடர் மாடியில் நேற்றிரவு (07) திடீரென தீ பரவியுள்ளதாகவும், இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தீயை அணைப்பதற்கு 200 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் ஈடுபட்டதாகவும் சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன. இதில் உயிரிழந்தவர் அக்கட்டிடத்தின் பணியாளர் ஒருவர் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த தீ விபத்து இடம்பெறும் போது டிரம்போ அவரது குடும்பத்தினரோ அந்த கட்டிடத்தில் இருக்கவில்லையென வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இது பலமான ஒரு கட்டிடம் எனவும், இதற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இவ்விபத்து குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கு உதவிய தீயணைப்புப் படையினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
இருப்பினும், இந்த டுவிட்டர் செய்தியை ஜனாதிபதி டிரம்ப் வெளியிடும் போதும் டவரில் தீ எரிந்து கொண்டிருந்ததாக செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.