ஊடகப்பிரிவு
மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 13 பேர் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் நியமிக்கப்படவுள்ளனர் மாவட்ட நீதிபதி என்.எம்.எம் அப்துல்லா மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் நியமிக்கப்படவுள்ளார். இது அட்டாளைச்சேனை எனும் ஊருக்கும் முழு கிழக்கிற்கும் கிடைத்த மிகப்பெரும் பெருமை என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் நசீர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிக்கு வாழ்த்து தெரிவித்து அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலே இதனை பாராளுமன்ற உறுப்பினர் நசீர் இதனை தெரிவித்துள்ளார், மேலும் அந்த அறிக்கையில்
எமதுாரைச்சேர்ந்த நீதிபதியும் நண்பருமான அப்துல்லாஹ் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவிப்பதோடு இன்னுமின்னும் பல பதவியுயர்வுகள் பெறவேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்
நீதிபதி என்.எம்.எம். அப்துல்லா பற்றி
திருகோணமலை மாவட்ட நீதிபதியான என்.எம்.எம் அப்துல்லா, இலங்கை நீதிச் சேவையில் சிறப்புத் தரத்தில் உள்ளவர். வடக்கு – கிழக்கில் நீதிவானாகவும் மாவட்ட நீதிபதியாகவும் அவர் கடமையாற்றினார். அட்டாளைச்சேனையை சேர்ந்த இவர் அல்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ் என்பது குறிப்பிடத்தக்கது