Top News

பால் மா இறக்குமதி நிறுத்தம், பிரதமருக்கும் எழுத்து மூலம் அறிவிப்பு

Related image
உலக சந்தையில் பால் மா விலை உயர் உயர்வடைந்துள்ளமை மற்றும் உள்நாட்டு பால்மா விலை உயர்வுக்கு அரசாங்கம் இடமளிக்காமை போன்ற காரணங்களினால் பால் மா இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கு பால்மா இறக்குமதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளதாக பிரதமருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் பால் மா இறக்குமதி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
உலக சந்தையில் பால் மா மெட்ரிக் டொன் ஒன்றின் விலை தற்பொழுது 3500 அமெரிக்க டொலர் முதல் 3600 அமெரிக்க டொலர்கள் வரை காணப்படுகின்றது.
நாட்டுக்கு ஒரு கிலோ பால்மாவை இறக்குமதி செய்வதற்கு சகல வரிகளும் உட்பட 135 ரூபா அரசாங்கத்தினால் அறவிடப்படுகின்றது.
பால் மா விலையை அதிகரிக்க அரசாங்கம் இடமளிக்காது போனால், அரசாங்கம் அறவிடும் வரியையாவது குறைக்குமாறு பால் மா இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எது எவ்வாறிருப்பினும், சந்தையில் தற்பொழுது பால் மா தட்டுப்பாடு இல்லையெனவும், ஹைலன்ட் மற்றும் பெலவத்த போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் பால் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.  

Post a Comment

Previous Post Next Post