வாகன சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வதற்காக பரீட்சார்த்திகள் முகம்கொடுக்கும் எழுத்து மூலப் பரீட்சையை டிஜிட்டல் முறைமையின் கீழ் நடாத்துவதற்கு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த புதிய நடவடிக்கை எதிர்வரும் மே மாதம் முதல் அமுலுக்கு வரும் என திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி இதனை அறிவித்துள்ளார்.
ஆரம்ப கட்டமாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹர காரியாலயத்தில் இந்த புதிய முறைமையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 150 பேருக்கு இப்பரீட்சைக்கு முகம்கொடுக்க முடியுமான வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சை மோஷடிகளைத் தவிர்த்தல், பரீட்சைப் பெறுபேறுகளை விரைவாக வெளியிடல் என்பன இந்த புதிய டிஜிட்டல் முறைமையின் கீழ் முடியுமாவதாகவும் ஆணையாளர் நாயகம் மேலும் கூறியுள்ளார்.