(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனை மாநகரசபைக்குட்பட்ட கல்முனைக்குடி ஆட்டோ பஸார் கடற்கரை வீதியில் தேங்கிக் கிடந்த திண்மக் கழிவுகளை அகற்றுவதற்காக பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கிணங்க உடனடியாக செயற்பட்டு கல்முனை மாநகர முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் திண்மக்களிவுகளை அகற்றுவதற்கான பணிப்புரைகளை விடுத்தார்.
இன்று (29) பிரதேச மக்கள் விடுத்த வேண்டுகளை அடுத்து சம்பவ இடத்திற்கு
வந்த முதல்வர் கழிவகற்றுவதை நேரடியாக கண்காணித்து பிரச்சினைக்கான
தீர்வினை பெற்றுக்கொடுத்தார்.
இங்கு கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான றோசன் அகதர், நிஸார் ஆகியோருடன் கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக்கழக உதைப்பந்தாட்ட பயிற்சியாளரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் வேட்பாளருமான முஹம்மட் பளீல் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.
Post a Comment