பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற சுதந்திர கட்சியின் முடிவு பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முடிவு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் பிரதமருக்கு அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, பிரதமர் பதவி விலக வேண்டும் என்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக முடிவெடுத்திருந்தனர்.
நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்தில் போது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒரே நிலைப்பாட்டில் இருப்பதற்கு இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை (04) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.