கட்டுநாயக்க விமானநிலையத்தின் பணியாளர்கள் இன்று (2) முன்னெடுக்கவுள்ள எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக, விமானநிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 3 நாட்களாக, விமானநிலைய வளாகத்தில் கலகம் அடக்கும் பிரிவினர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் விமானநிலையத்தின் பாதுகாப்புக்காக விமானப்படையினர் மற்றும் கொமென்டோ படையினர் 1500 பேர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
விமானநிலைய நிர்வாகசபை பணியாளர்களின் கொடுப்பனவை 10,000 ரூபாவால் அதிகரிக்கக் கோரி, இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதுடன், இந்த கொடுப்பனவு அதிகரிப்புக்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.