இலங்கை, ரஷ்யாவுக்கு இடையிலான அரச கடன்திட்டத்தின் கீழ் போர்க்கப்பல் கொள்வனவு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன, மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் குழுவொன்றுடன் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சரத் குமார, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரணசிங்க ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட 500 மில்லியன் டொலர் கடன் திட்டத்தில் எஞ்சியுள்ள, தொகையைக் கொண்டு, 158 மில்லியன் டொலர் பெறுமதியான போர்க்கப்பலை ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ரஷ்யாவிடம் இருந்து,10 ஹெலிக்கொப்டர்கள், இரண்டு சரக்கு விமானங்கள், ஆறு, போர் விமானங்கள் ஆகியவற்றை கொள்வனவு செய்யவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.(